யான், எனது என்னும் செருக்கு உள்ளவர்களால் முருகனைக் காண இயலாது என்பது கருத்து. (4) | அண்ணல் வேத னரிமுத லோரெலாம் | | நண்ணு மவ்வத் தொழில்கண் டயரவர் | | எண்ண கன்று தணிகை யிருங்கிரி | | யுண்ண யந்தமர்ந் தானொரு வள்ளலே. |
(கு - ரை.) அண்ணல் - பெருமை. வேதன் - நான்முகன். அரி - திருமால். நண்ணும் அவ்வத் தொழில் - தத்தமக்குப் பொருந்திய படைத்தல், காத்தல் முதலிய தொழில்கள். கண்டு - செய்து. அயர் - மறத்தல். எண்அகன்று - எண்ணத்தின் நீங்கி, தணிகை இருங்கிரியுள் நயந்து அமர்ந்தான் எனப் பிரித்துப் பொருள் கொள்க. தொழில் கண்டு அயர் அவர் எண்ணகன்று ஒரு வள்ளல் தணிகை இருங்கிரியுள் நயந்து அமர்ந்தான் எனக் கூட்டுக. (5) | வள்ளல் பூண்டு மறுமைப் பயன்கொள்வோர் | | உள்ள நாண வுபகரித் தொய்யெனப் | | பள்ள மேனடுப் பக்கமுங் கொட்புறீஇ | | நள்ளல் செய்தான் தணிகையி னாதனே. |
(கு - ரை.) வள்ளல் பூண்டு - இரப்பவர்களுக்கு வரையாது கொடுத்தலை மேற்கொண்டு. மறுமைப் பயன் கொள்வோர் - அதனால், மறுமையில் இன்பம் அடைய விரும்புவோர். உபகரித்து - உயிர்களுக்கு வேண்டுவனவற்றை உதவி, பள்ளம் மேல் நடுப்பக்கமும் கொட்பு உறீஇ - நாகலோகம், விண்ணுலகம், மண்ணுலகம் ஆகிய உலகங்களைச் சூழ்ந்து (எல்லாவற்றையும் தனக்குள் அடக்கிக் கொண்டு) நள்ளல் - உறவு கொள்ளுதல். முருகன் பயன் கருதாது உயிர்கட்கு உதவுவதனால் பயன் கருதி ஈவோருள்ளம் நாணுவதாயிற்று. பூண்டு கொள்வோர் உள்ளம் நாண தணிகையின் நாதன் உபகரித்து ஒய்யெனக் கொட்பு உறீஇ நள்ளல் செய்தான் எனக் கூட்டுக. (6) | நாத மாதி நவையென நீவியென் | | போத மும்புக ரென்றொரு வித்தன | | தோத ரும்பதத் தொற்றித் துணர்த்தினான் | | மாதர் காவி வரைத்தலை மன்னனே. |
(கு - ரை.) நாதம் ஆதி - ஒலி முதலிய. நவை - தீது. நீவி. போக்கி. என் போதம் - என்னைப்பற்றிய அறிவு (பசுஞானம்) ஓதரும் பதம் என்பதனை ஓத அருமை பதம் எனப் பிரித்துப் |