பக்கம் எண் :

திருத்தணிகைப் பதிற்றுப்பத்தந்தாதி்1487

 முதலா திறாது நிறைமோன ஞான
           முறையிற் றெரிந்து முநிவோர்
 பதறாது மோக வலைகீறி வீறு
           பரவின்ப வாரி படியு
 முதன்மே வடுக்க னிர்மிகாவி வெற்பி னுறைகின்ற
           சைவ முதல்வன்
 மதமான யாவுமறத்தேவ ரோடு
           வருவித் தளிக்கு மொளியே.

(கு - ரை.) முதலாது - பிறவாது. இறாது - இறவாது. மோகவலை - ஆசையாகிய வலை. கீறி - கடந்து. இன்பவாரி - ஆனந்தக் கடல், பேரானந்தம். முதல் மேவு அடுக்கல் - முதன்மை (தலைமை) பொருந்திய மலை.

நிறை மோனம் முறையில் தெரிந்து முனிவோர் வலைகீறி இன்ப வாரிபடியும் அடுக்கலாகிய காவிவெற்பில் உறைகின்ற முதல்வன் வருவித்து அளிக்கும் ஒளியே எனமுடித்துப் பொருள் கொள்க : படியும் என்னும் பெயரெச்சம் இடப்பெயர் கொண்டது. 'பெம்மான் முருகன் பிறவான் இறவான்' என்னும் கந்தரனுபூதியாலும் தணிகைவரைப் பெருமான் பிறப்பும் இறப்பும் அற்ற பரம்பொருளே ஆவான் என்பது உணர்க.

(13)

 ஒளிகான் றிலங்கு மணிசூழ் கிடக்கை
           தவிசாக வூறு மதுநீர்த்
 துளிகான் றிலங்கு பொழினீழல் யானை
           துணையோடு பள்ளி பயிலும்
 வளிகான் றிலங்கும் வெளிமுற் றடைத்து
           வளர்காவி வெற்பின் மதலை
 தெளிகான் றிலங்கு மடியா ருளங்க
           டிகழ்கோயில் கொண்ட வுறவே.

(கு - ரை.) கிடக்கை தவிசு ஆக - பூமியே படுக்கை ஆக. மது - தேன். பொழில் - சோலை. பள்ளி பயிலும் - படுத்து உறங்கும். வளி - காற்று. வெளி - ஆகாயம். முற்று - முழுவதும். தெளி - பேரறிவு. உறவு - உறவினன்.

கிடக்கை தவிசு ஆகப் பொழில் நீழல் யானை துணையோடு பள்ளி பயிலும் அடைத்து வளர்காவிவெற்பின் மதலை அடியார் உளங்கள் கோயில் கொண்ட உறவே என முடித்துப் பொருள் கொள்க.

பள்ளி பயிலும் காவி வெற்பு. அடைத்து வளர் காவி வெற்பு எனக் காவி வெற்புக்கு இரண்டு அடைமொழிகள் வந்திருத்தல் காண்க.

(14)