பக்கம் எண் :

திருத்தணிகைப் பதிற்றுப்பத்தந்தாதி்1489

மேனி மாசு முழுக ஒரு காளை ஆகி அடியில் வீழ்ந்து இறைஞ்சி நின்ற இளையோன் இன்பம் நல்கும் இன்பவுருவே என இயைத்துப் பொருள் காண்க.

(16)

 உருமல்கு தேர்கள் பருமித்த வேழ
           முளைபொங்கு வாசி முனைவோர்
 திருமல்கி யீன்ற வமராட் டுகந்து
           செறிசுற்ற மோட வுணரைக்
 குருமல்கு வேலி னுயிர்சூன்று தின்ற
           குளிர்காவி வெற்பி னமர்வோன்
 பொருண்மல்கு மாறு புவியோர்க்கு நல்கு
           பொருளென்ப தேர்ந்த புலவோர்.

(கு - ரை.) உருமல்கு - அழகு மிக்க. பருமித்த - பருத்த. உளை - பிடரி மயிர். வாசி - குதிரை. முனைவோர் - காலாட் படைஞர். அமர் - போர். குரு - ஒளி. மல்குமாறு - நிறையுமாறு. தேர்ந்த - ஆராய்ந்து உண்மையை உணர்ந்த.

மல்கி ஈன்ற அமராட்டுகந்து அவுணரை வேலின் உயிர் சூன்று தின்ற காவி வெற்பின் உரவோன் புவியோர்க்குப் பொருள் நல்கு பொருள் என்ப புலவோர் என முடித்துப் பொருள் காண்க. 'உரவோனை' என இரண்டனுருபு விரிக்க. 'வலாரி தலாரி எனும் சூர்மா மடியத் தொடுவேலவனே' என்பதனாலும் சூரன் முதலிய அவுணரை வேலால் கொன்றது உணர்க.

(17)

 புலவோரை யன்று விடமுண்டு காத்த
           புலவோன் றனக்கு மவன்மெய்க்
 குலவோர் மகட்கு நடுவட் சிறந்த
           குழமேனி கொண்டு வளரும்
 நிலவோடு பானு வழியற் றிறைஞ்ச
           நிமிர்காவி வெற்பி னுரவோன்
 நலமேவு மெச்ச முலகோர்க ளிக்கு
           நலனென் றரற்று மறையே.

(கு - ரை.) புலவோர் - தேவர். விடமுண்டு காத்த புலவோன் - சிவபெருமான். அவன் மெய்குலவு ஓர்மகள் : உமையம்மையார். நடுவண் - நடு. குழமேனி - இளமையுருவம். பானு - கதிரவன் . நலம் மேவும் எச்சம் - நன் மக்கட் பேறு.

புலவோன் தனக்கும் ஓர் மகட்கும் நடுவண் குழமேனி கொண்டு வளரும் காவிவெற்பினுரவோன் எச்சம் உலகோர்க்கு அளிக்கும் நலன் என்று மறை அரற்றும் என முடிவு கொள்க. ஈண்டும் 'உரவோனை' என இரண்டனுருபு விரிக்க.

(18)