| மறைநான்கு மேனை யலகற்ற நூலும் | | வழுவின் றுணர்ந்த மலய | | நிறைமா தவத்து முனிவோனை மாயை | | நிகளஞ் சிதர்ந்து கழலக் | | குறையாத ஞான மறிவித்த காவி | | வரையிற் குலாவு குமரன் | | தறையாதி யாரு முணர்வானு ணின்று | | சலியா துணர்த்து மறிவே. |
(கு - ரை.) அலகு - கணக்கு. வழு - குற்றம், ஐயந்திரிபுகள். இன்றுணர்ந்த - இன்றி உணர்ந்த; இன்றி என்பது இன்று எனத் திரிந்து நின்றது. மலயம் - பொதியமலை. முனிவோன் - அகத்தியன். நிகளம் - விலங்கு. உள் - உள்ளம். தறை - தரை. நான்கும் நூலும் உணர்ந்த மலய முனிவோனை நிகளம் கழல ஞானம் அறிவித்த குமரன் தறையாதியாரும் உணர்வான் உள் நின்று உணர்த்தும் அறிவே என முடிவு கொள்க. தரை என்பது எதுகை நோக்கித் தறை என நின்றது. (19) | அறிவா னமைந்த முனிவோர் தவஞ்செய் | | தறல்போ லிருண்ட குழலார் | | கிறிமாய வெல்லு முறைசூழ்ந்த குன்று | | கிழவோ னெனப்ப கர்தரும் | | வெறிவீசு காவி மலர்மூன்று நாளும் | | விரியும் விலங்கல் விமலன் | | செறியாவி யாதி யுலகுந் தனாது | | கிழமைப் படுத்த சிவமே. |
(கு - ரை.) அறல் - கருமணல். கிறி - சூழ்ச்சி. குன்று கிழவோன் - குறிஞ்சி நிலத்து இறைவன். வெறி - நறுமணம். காவி - கருங்குவளை. விலங்கல் - மலை. மூன்று நாள் - காலை, நண்பகல், மாலை என்னும் மூன்று போது. அமைந்த முனிவோர் தவஞ்செய்து கிறிமாய வெல்லும் முறை சூழ்ந்த குன்று கிழவோன் எனப் பகர்தரும் விமலன் ஆவியாதி உலகும் தனாது கிழமைப் படுத்த சிவமே என்க. (20) வேறு | சிவந்த வாயிதழ் மாதரார் செப்பிள முலையை | | உவந்த வாவுமுள் ளகவிரு ளொதுக்கியொள் ளொளிவாள் | | நிவந்த வாதவ னெனத்தரு நிராமய னடியார் | | தவந்த வாதுயர் தணிகையா னென்பதக் கோர்கள். |
|