(கு - ரை.) வீட்டி - அழித்து. அரில் - நெருக்கம், தூறு. நீலவெற்பு - தணிகைமலை. விளைநர் - விளைப்பவர். குமைத்தோர் - அழித்தோர். ஐம்புலன் எனும் வனத்தை வீட்டி ஐம்பொறி யெனும் புலன் முழுவதும் நவைகள் ஓட்டி இறையவன் அருளால் கூட்டும் ஆனந்தம் விளைநரன்றோ பகை குமைத்தோராவர் என்க. ஆவர் என்பது வருவித்து உரைக்கப்பட்டுள்ளது. (30) வேறு | குமைத்தவைம் பொறியி னார்கள் | | குழாங்குழா மாகிநோற்கும் | | நமைத்தடம் பொழில்சூழ் நீல | | நளிர்வரை யமர்ந்த நம்ப | | கமைத்தலைச் செல்லா வின்னற் | | கருங்கட லழுந்தி னேனை | | இமைத்திடு மளவிற் காவா | | யெனிலுயிர் தரிக்கி லேனே. |
(கு - ரை.) குழாம் குழாம் ஆகி - கூட்டம் கூட்டமாகச் சேர்ந்து. கமைத்தலைச் செல்லா - பொறுத்துக்கொள்ள முடியாத. இன்னற் கருங்கடல் - துன்பமாகிய பெரிய கடலில். இமைத்திடும் அளவில் - ஒரு நொடிப்பொழுதிற்குள். காவாய் - காத்தருளாய். குமைத்த ஐம்பொறியினோர்கள் நோற்கும் பொழில் சூழ்வரை அமர்ந்த நம்ப, இன்னற் கடல் அழுந்தினேனைக் காவாய் எனில் உயிர் தரிக்கிலேன் என்க. 'ஏ' : ஈற்றசை. (31) | தரிப்பதுன் சரணப் போது | | சாற்றுவ துனது நாமம் | | விரிப்பது னலகில் சீர்த்தி | | மேவுவ துனைப்பெற் றோரை | | அரிப்பதுன் னருளாற் பாச | | மாகநீ யருளிச் செய்யாய் | | தெரிப்பரும் பொருளே காவிச் | | செழுங்கிரி யமர்ந்த தேவே. |
(கு - ரை.) தரிப்பது - தலையில் அணிந்துகொள்வது. சாற்றுவது - வாயால் சொல்லுவது. விரிப்பது - உலகில் பரவுமாறு செய்வது. மேவுவது - அடைவது. அரிப்பது - கெடுப்பது. தெரிப்ப அரும்பொருள் - இன்ன தன்மையன் என்று எடுத்து இயம்புதற்கு இயலாத பொருள். |