தரிப்பது சரணம், சாற்றுவது நாமம், விரிப்பது சீர்த்தி, மேவுவது பெற்றோரை, அரிப்பது பாசம் ஆகத் தேவே அருளிச் செய்யாய் என வேண்டிக் கொள்க. சீர்த்தி - மிக்க புகழ். (32) | தேவரு மயனு மாலுஞ் | | சென்றுசென் றிறைஞ்சிப் போதும் | | பூவலர் பொழில்சூழ் காவிப் | | பொருப்பகம் பூத்த வள்ளல் | | யாவது நன்மை கல்லா | | விழுதையேற் குண்டாங் கொல்லோ | | தாவரும் பரமா னந்தத் | | தனிக்கட லழுந்து மாறே. |
(கு - ரை.) சென்று சென்று - நாள்தோறும் தவறாது சென்று, இறைஞ்சிப் போதும் - வழிபாடு செய்து வருகின்ற. காவிப் பொருப்பகம் - திருத் தணிகை மலையில். 'பொருப்பகம்' என்பதில் 'அகம்' : ஏழனுருபு. நன்மையாவதும் கல்லா - நல்லனவற்றுள் ஒன்றும் அறியாத. இழுதையேற்கும் - பொய்யனாகிய எனக்கும். தா - குற்றம். 'அருமை' - இன்மை குறித்து நின்றது. தேவரும் அயனும் மாலும் இறைஞ்சிப் போதும் பொருப்பகம் பூத்த வள்ளல், நன்மை கல்லா இழுதையேற்கும் ஆனந்தக் கடல் அழுந்தும் பேறு உண்டாங் கொல்? என்க. 'ஓ' அசை நிலை. (33) | மாறுகொண் டயலாற் கந்தோ | | வழுவறி தேற்றிச் சால | | வீறுதம் வழுக்கட் கின்மை | | விளம்புந ரிணக்கம் வல்லே | | நூறுமா கருணை காட்டி | | நுன்னடிக் கன்பு நல்காய் | | ஏறுசீர்த் தணிகை யோங்க | | லிருந்தருள் விமல வாழ்வே. |
(கு - ரை.) மாறு - பகைமை. அயலாற்கு - பிறனொருவன் மீது; வழுவறிது ஏற்றி - தீமை ஒன்றும் செய்யாதிருக்கவும், செய்ததாகப் பொய்க் குற்றங்களை ஏற்றி. சாலவீறு தம் வழுக்கட்கு - மிகப் பெரிய குற்றங்களைத் தாம் செய்திருந்தும். இன்மை விளம்புநர் - செய்யவே இல்லை யென்று மறுத்துக் கூறுவோர். இணக்கம் - தொடர்பை. வல்லே நூறுமா - விரைவில் விட்டு நீங்குமாறு. ஓங்கல் - மலை. 'அயலாற்கு' : உருபு மயக்கம். 'நூறு மாறு' என்பது கடைக் குறைந்து 'நூறுமா' என நின்றது. |