விமல வாழ்வே, அயலாற்கு வழு வறிது ஏற்றித் தம் வழுக்கட்கு இன்மை விளம்புநர் இணக்கம் நூறுமா காட்டி அன்பு நல்காய் என இயைத்துப் பொருள் காண்க. (34) | வாழுமா றாக்கை மீட்டும் | | வகுத்திடிற் சீர்த்தி யொன்றே | | சூழுமா றருள்புன் சொல்லுஞ் | | சூழுமே லதனை மாற்றி | | ஆழுமா நரகி னூக்கி | | யடர்ப்பதே நன்று போலும் | | தாழுமா தவர்க்கள் ளூறும் | | தணிகையம் பதியு ளானே. |
(கு - ரை.) ஆக்கை - உடம்பு. வகுத்திடின் - படைத்திட்டால். சீர்த்தி ஒன்றே சூழுமாறு அருள் - உன்னுடைய மிக்க புகழையே நினைக்கவும் வாழ்த்தவும் அருளல் வேண்டும். புன் சொல்லும் சூழுமேல் - புன்சொற்களையும் சொல்லக்கூடிய நிலைமையில் என்னை வைக்க விரும்புவாயானால். (அதனினும்) அதனை மாற்றி - அம்மக்கட் பிறப்பினை மாற்றி. நரகின் ஊக்கி - நரகில் வீழ்த்தி, அடர்ப்பதே நன்று - துன்புறுத்துவதே நல்லது. தணிகையம் பதியுளானே, மீட்டும் ஆக்கை வகுத்திடின் சீர்த்தி ஒன்றே சூழுமாறு அருள்; புன்சொல்லும் சூழுமேல் அதனை மாற்றி நரகின் ஊக்கி அடர்ப்பதே நன்று என வினை முடிவு செய்க. 'போலும்' என்பது உரையசை. (35) | பதியுளே கிடந்தும் பாசம் | | பற்றிய வாறும் பின்னர் | | மதியுளே விராய பொல்லா | | மலந்தபு மாறுஞ் சுத்தக் | | கதியுளே கலந்து நிற்கும் | | காட்சியும் தெரித்தாட் கொண்டான் | | ததியுளே நெய்போ னிற்குந் | | தணிகையங் கடவு ளானே. |
(கு - ரை.) பதியுளே கிடந்தும் - எங்கும் நீக்கமற இருந்தருளும் இறைவன் நிறைவினுக்குள் அடங்கி யிருக்கவும். பொல்லா மலந்தபு மாறும் - கொடிய மும்மலங்களும் நீங்குமாறும். சுத்தக் கதியுளே கலந்த காட்சியும் - களங்கமற்ற வீடுபேற்றிலே இறைவனோடு இரண்டறக் கலந்து நிற்கும் நிலையும். தெரித்து - தெளியும்படி செய்து. ததி - பால். ததி - காரியவாகு பெயர். |