| கறைகெழு களத்தெத் மண்ணல் கரைந்தபல் லாக மத்தின் | | முறைநெறி யொழுக்கி னோடு முடிவில்பல் லறமு மின்பம் | | நிறையும்விம் மிதமு மென்று நீக்கமில் லணிக லன்கள் | | இறைவியா லணியப் பட்ட திலங்குதுண் டீர நாடு. |
(இ - ள்.) விளக்கம் பொருந்திய துண்டீர நாடானது, நஞ்சணியுந் திருமிடற்றினையுடைய எம்முடைய சிவபெருமான் றிருவாய் மலர்ந்தருளிய பலவாகிய வாகமங்களிற் கூறிய விதிவழியே யொழுகுகின்ற ஒழுக்கத்தினோடு கெடுதலில்லாத பல தருமமும் இன்ப நிறைதற் கேதுவாகிய அதிசயங்களென்று சொல்லப்படுகின்ற நீக்குதலில்லாத அணிகலன்களும் தலைவியாகிய காமாட்சியம்மையாரால் அணியப்பட்டுள்ளது. (வி - ம்.) அணிகலன் - இரண்டாவதன் றொகை; தொண்டைநாடு ஒரு காலத்தில் துண்டீரன் என்னுமரசனால் ஆளப்பட்டமையின் துண்டீர நாடெனப்பட்டது; விம்மிதம் காஞ்சிப்புராணத்து விம்மிதப் படலத்துக் கூறப்பட்டவை. விம்மிதம் - சாதியொருமை; இஃது உயர்வு நவிற்சி. (7) | மான்றவல் வினைகால் சீக்கும் வளங்கெழு தொண்டை நாடு | | சான்றவ ருடைத்தென் றோதுந் தகுமொழிக் கதிரான் மற்றை | | யேன்றசீர் நாட்டின் சீர்த்தி யென்னுமீ னொளிமை யாப்ப | | ஆன்றசெம் பருதியாய தனையதண் டகநன் னாடு. |
(இ - ள்.) அத்தன்மை பொருந்திய நல்ல தண்டக நாடானது மயங்குதற் கேதுவாகிய வலிய வினைகளைத் துடைக்கும் வளம்பொருந்திய தொண்டைநாடு சான்றோருடைத்தென்று கூறும் ஆன்றோர் வசனங்களாகிய கிரணத்தினால் ஏனைய சிறப்புப் பொருந்திய மற்றைய நாட்டின் கீர்த்தியென்று சொல்லப்படுகின்ற நட்சத்திரத்தி னொளி மழுங்க உயர்ந்த செஞ்ஞாயிறாயது. (வி - ம்.) மான்றல் - மயங்கல்; கால் சீத்தல் - துடைத்தல்; கதிர் - கிரணம்; மையாத்தல் - மயங்கல்; ஈண்டு ஒளிகுறைதல், இதனை "மலர் காணின் மையாத்தி நெஞ்சே" என்னுங் குறளுரையா லுணர்க. "தொண்டைநாடு சான்றோருடைத்தென்" பதை 'வேழமுடைத்' என்னும் வெண்பாவா னறிக. (8) | கொடைப் புகழ்க் கவயம் போர்த்துக் கூரறப் படைக ளேந்தி | | விடைப்பரு வேழம் பொற்றேர் விரைசெலற் பரியாள் வாய்மை | | படைப்பருஞ் சீல நோன்பு பத்திமை யாகப் பாய்த்திக் | | கடைப்படு பாவத் தெவ்வைக் கடந்ததத் தொல்லை நாடு. |
(இ - ள்.) பழமையாகிய அத்தொண்டை நாடானது, ஈகையான் வருகின்ற கீர்த்தியாகிய மெய்புகு கருவியைப் போர்த்து, கூரிய தருமமாகிய படைக்கலன்களைத் தாங்கி, விரோதித்தலருமையாகிய யானையும் அழகிய தேரும் விரைவாகச் செல்கின்ற குதிரையும் காலாளுமாகிய |