பக்கம் எண் :

16தணிகைப் புராணம்

நான்குவகைப் படைகள் முறையே உண்மை தேடுதற்கரிய வொழுக்கம் விரதம் சிவபக்தியுமாகச் செலுத்தி இழிந்த பாவமாகிய பகைவனை வென்ற
தென்க.

(வி - ம்.) விடைப்பு - விரோதித்தல்; கவயம் - உடம்புக்கீடு; தெவ்; ஆகுபெயர்; கடந்தது - வென்றது; இஃது உருவக உயர்வு நவிற்சியணி. இனி விடைப்பரும் வேழம் என்பதற்கு வெல்லுதற்கரிய வேழமென்பாரு முளர்.

(9)

 முரிதிரை சுருட்டிப் பல்வீ மொய்த்தபஃ றீர்த்த மாடி
 விரிபுகழ்த் தலங்கள் சால மேவியா னந்தக் கூத்தர்க்
 குரியபல் வடிவந் தன்னு ளுறுத்தலால் வீடு வெஃகிக்
 கரிசறுத் தவர்கள் போன்று கவின்றதப் பொருவி னாடு.

(இ - ள்.) ஒப்பில்லாத தொண்டை நாடானது துணிபடும் அலைகளை மடக்கிப் பல பூக்கள்மொய்த்த பல தீர்த்தங்களிலாடி விரிந்த புகழையுடைய திப்பிய தேசங்களை மிகவும் பொருந்தி ஆனந்தக் கூத்தராகிய நடராசப் பெருமானுக்குரிய உமைகேள்வர் முதலிய பல வடிவங்களையுந் தன்னிடத்து நிலைபெறுத்தலால் வீட்டை விரும்பிக் குற்றத்தை நீக்கிய பெரியோர்களைப் போன்று விளங்கிய தென்க.

(வி - ம்.) ஆடியென்பதற்கு நாட்டிற்கேற்பப் பொருந்தியெனவும் அடியார்க்கேற்ப மூழ்கியெனவும், மேவியென்பதற்குத் தலங்கள் மிகுதியாக நாட்டிற் பொருந்தியெனவும் அடியார்கள் சென்றெனவும், உள் என்பதற்கு நாட்டிற்கேற்ப இடமெனவும், அடியார்க்கேற்ப உளமெனவும் பொருள்கொள்க. வெஃகி - விரும்பி; கரிசைச் செய்வதனைக் கரிசு என்றார். கரிசு - குற்றம்; இது சிலேடையணி; ஆனந்தக் கூத்தர்க்குரிய பல வடிவங்களை `மதியணியுஞ் சடை' என்னுஞ் செய்யுளானறிக.

(10)

 கருங்குழல் கானிற் றோற்றிக் கதிர்முலை மலையிற் றோற்றி
 யிருங்கைபூம் பணையிற் றோற்றி யெரிமணிக் கலாப வல்குல்
 பெருங்கடற் றோற்றி வேத வொழுக்கெனுங் கணவற் பின்னி
 யொருங்குநாற் பயனா மக்க ளுயிர்த்தளிப் பஃதந் நாடு.

(இ - ள்.) அத் தொண்டை நாடு கரிய கூந்தலை முல்லை நிலத்தாற் காட்டியும், ஒளிபொருந்திய தனத்தை மலைசார்ந்த குறிஞ்சி நிலத்தாற் காட்டியும், பெரிய கரங்களைப் பொலிவுபெற்ற மருதநிலத்தாற் காட்டியும் ஒளிவீசுகின்ற மணிகள்கோத்த கலாபத்தையணிந்த அல்குலைப் பெரிய கடலாகிய நெய்தனிலத்தாற் காட்டியும், வேதத்தில் விதித்துள்ள ஒழுக்கமென்னுங் கணவனைக்கூடி ஒருசேர அறம்பொருளின்பம் வீடாகிய நால்வகைப் பயனாகிய மக்களைப் பெற்றுக்
காப்பாற்றுவதாம்.

(வி - ம்.) குழலை முல்லைநிலத்தாற் றோற்றி யென்றார் கான்கூந்தற் குவமை யாதனோக்கி; தனத்தை மலையாற்காட்டிக் கையைப் பணையாற் றோற்றுவித்தல், மலையும் மருதநிலத்துள்ள தாமரை கரும்பு மூங்கில்களும், கடலும் இவ்வவயவங்கட் குவமையாத னோக்கி யென்க. கான் - முல்லை நிலம்; பணை - மருதநிலம்; மலை - குறிஞ்சிநிலம்; கடல் - நெய்தல்