பக்கம் எண் :

திருநாட்டுப் படலம்17

நிலம்; "முன்னுயிர் வருமிடத் தாய்தப்புள்ளி மன்னல் வேண்டும் அல் வழி யான" என்பதோத்தாகலின் ஆய்தம் விரிந்துநின்றது; கலாபம் - பதினாறு கோவை.

(11)

 விண்ணவ ரவுணர் சித்தர் விஞ்சையர் கருடர் நாகர்
 மண்ணவ ரெவருந் தோய்ந்து வரம்பெறு மேன்மை சான்ற
 புண்ணிய நதிகள் பல்ல பொங்கொளி மணிநீர்ப் பாலி
 அண்ணல்வார் நதியி னோடு மணிந்ததப் பொருள்கூர் நாடு.

(இ - ள்.) அப்பொருள் மிகுந்த தொண்டைநாடு தேவர்களும் அவுணர்களும் சித்தர்களும் வித்தியாதரரும் கருடரும் நாகரும் மனிதர்களுமாகிய யாவரும் மூழ்கி விரும்பிய வரத்தைப் பெறுகின்ற மேன்மை பொருந்திய புண்ணிய வடிவாயுள்ள நதிகள் பலவற்றையும் மிக்க வொளியோடு கூடிய அழகுபொருந்திய நீரோடுகூடிய தலைமையையுடைய நீண்ட பாலிநதியோடு அலங்கரித்துக்கொண்ட தென்க;

(வி - ம்.) நாடு நதிகள் பலவற்றைப் பாலியினோடு அணிந்த தெனக்
கூட்டுக.

(12)

 கடவுள் வெண்கரி விசும்பொரீஇப் புரந்தரன்
           காவலன் திசைநோக்கிப்
 படர்வ தொத்துவெண் ணிறமுகிற் குழாமணி
           படுகடற் பரப்பண்மித்
 தொடலை வெண்டிரைப் பெரும்புனன் முகந்தது
           தொல்லைபோ லொருசாபம்
 அடர வல்விரைந் தெழுந்தென வுடல்கறுத்
           தந்தரத் தெழுந்தன்றே.

(இ - ள்.) வெண்மைநிறம் பொருந்திய மேகக்கூட்டங்கள் தெய்வத்தன்மை வாய்ந்த (ஐராவதமென்னும்) வெள்ளை யானையானது தேவர் உலகத்தினின்று நீங்கி இந்திரன் காவல்செய்கின்ற அழகிய கிழக்குத் திசையை நோக்கிச் செல்வதொத்து முத்துப் பிறத்தற்கிடமாகிய கடற்பரப்பை யணுகி மாலைபோ லொழுங்காகிய வெள்ளிய அலைகளோடு கூடிய கடனீரைமொண்டு அவ் வயிராவதமானது முன்னர்த் துருவாச ரிட்ட சாபம்போல ஒருசாபம் வந்து தொடராநிற்க மிக விரைவுற்று எழுந்தாற்போல உடல் கறுக்கப்பெற்று ஆகாயத்தி லெழுந்தது.

(வி - ம்.) ஏனைய திசையில் கடல்கள் உளவாகவும் கீழ்த்திசைக் கடலைக் கூறினார், மேகங் கீழ்த்திசைக் கடலைநோக்கிச் சேறலியல்பாகலின்; தொடலை - மாலை போன்றவெனத் தொகையாகக் கொள்க. அது வென்றது வெண்கரியை; அகரம் பண்டறிசுட்டு; எழுந்தாலென்னும் வினையெச்ச வீறுதொக்கது; அம் : சாரியை; இது விரியுவமையணியும் பதப் பொருட்காட்சி யணியுமாம்.

(13)

 தேத்த டைத்திரள் கிழிந்தசும் பறாவரைச்
           செழுங்கிரி தனைமன்றுட்