| கூத்தி யற்றருட் பரம்பரன் மதலையைக் | | குறித்துநோன் புழந்தேதம் | | நீத்தி டக்கரி யடுத்தென நந்தித | | னெடுமலை முதலாகத் | | தூத்த டப்பொலங் குவட்டுயர் சிலம்பெலாந் | | தொடர்ந்துசென் றிறுத்தன்றே. |
(இ - ள்.) அவ்வயிராவதயானை தேன்கூட்டின் றிரள்கிழிதலால் துளித்தனீங்காத பக்க மலைகளையுடைய செழித்த தணிகை வரையை அடுத்ததுபோலப் பொன்னம்பலத்தின்கண் நடனத்தைச் செய்கின்ற அருளோடுகூடிய நடராசப் பெருமானுடைய புத்திரராகிய முருகக் கடவுளைக் குறித்துத் தவஞ்செய்து சாபத்தினால் வந்த குற்றத்தை நீக்கும்படி நீண்ட நந்திமலை முதலாகப் பெரிய பரிசுத்தமாகிய பொன்னிறத்தையுடைய சிகரங்களோடு கூடிய உயர்ந்த மலைகளினெல்லாம் பொருந்திச் சென்று தங்கியது. (வி - ம்.) எழுவாய் மேலைச் செய்யுளினின்றும் வருவித்துரைக்கப் பட்டது. இதனை முன்வருஞ் செய்யுட்குங் கொள்க. தேத்தடை - தேன்கூடு; 'ஒற்றுமிகு தகரமொடு நிற்றலு முரித்தே' யென்பதனால் தேன் அடை - தேத்தடை யென்றாயது; அசும்புதல் - துளித்தல்; அசும்பு முதனிலைத் தொழிற்பெயர்; வரையும் வரைசார்ந்த நிலமும் குறிஞ்சியாதலின், ஈண்டுவரை யென்றது குறிஞ்சி நிலத்தை; மூங்கிலென்பாருமுளர்; ஏதம் ஈண்டுச் சாபத்தையுணர்த்தி நின்றது; குவடு - சிகரம்; சிலம்பு - மலை; கிழிந்தென்பது காரணப்பொருட்டாய வினையெச்சம்;. தன் : சாரியை; இது உவமையணி. (14) | செம்ம லார்க்கிபஞ் சாத்தமேக் குயர்த்தவா | | சிகையெனச் சிலைவாங்கி | | விம்மு வாண்மணித் தீபவா ராதனை | | விளைத்தெனத் தடித்தீன்று | | சும்மை யேத்தெடுத் தெனமுழக் கெழீஇவிழி | | சொரிந்தெனப் பொழிந்தெங்கு | | மம்ம ரேதநீத் தொளிர்ந்தென வெண்ணிற | | வயக்கமாண் டதுமாதோ. |
(இ - ள்.) அவ்வியானை தலைவராகிய முருகக் கடவுளுக்குச் சாத்தற்பொருட்டு மேலே யர்த்திய திருவாசிகை யென்று சொல்லும்படி வில்லை வளைத்து மிக்க வொளி பொருந்திய இரத்தின தீபவாராதனை செய்த தென்று சொல்லும்படி மின்னலை வெளியிட்டுப், பேரோசையாகிய தோத்திரஞ் செய்ததென்று சொல்லும்படி முழக்கத்தைச்செய்து, ஆனந்தக் கண்ணீர் சொரிந்ததென்று சொல்லும்படி மழையைப் பொழிந்து, மயக்குறுத்து மச்சாபக் குற்றத்தை நீக்கி முன்னைய வடிவு பெற்று எழுந்ததென்று சொல்லும்படி வெண்ணிறமாகிய விளக்கத்தினால் மாட்சிமையடைந்தது. |