பக்கம் எண் :

திருநாட்டுப் படலம்19

(வி - ம்.) மேகக்கூட்டம் வாங்கி ஈன்று எழீஇ பொழிந்து நீத்து மாண்டதெனக் கூட்டுக. மேக்கு - மேல்; வாசிகை - திருவாசி; வாசிகை வாசி யென்பன ஒரு பொருளன; "ஓங்காரமே நற்றிருவாசி" என்பதனாலும் "பாத்தியமணிகள் கொண்டிழைத்திலங்கும் பார வாசிகை மணிமேகஞ் சாத்தியதென வில்வளைத்துறுஞ் சோண சைலனே கயிலைநாயகனே" என்பதனாலும் அறிக. சிலை - வானவில்; சும்மையேத்து - முழக்கமாகிய தோத்திரம், வயக்கம் - விளக்கம்; ஏதம் - சாபத்தாலுண்டாகிய கருநிறம்; இதுவும் மேலையணி.

(15)

 உருகு வெஞ்சின வெம்மைதா னுடற்றுழி
           யுடைகுளி ரொளித்தாங்குப்
 பெருகு தண்குளிர்க் குடைந்திது பொழுதுபோர்
           பெட்டல்யா வருங்கண்ணாக்
 குருகு முன்கையார் குங்கும முலைகளிற்
           கொம்மெனக் கரந்தன்றாற்
 றிருகு தம்பகை சார்தனங் கிடைக்குமேற்
           சிவணுறா தவர்யாரே.

(இ - ள்.) எல்லாப் பொருளும் உருகுதற்கேதுவாகிய கோபத் தோடுகூடிய வெப்பமானது தான் போர் செய்த காலத்துத் தனக்கு முன்னர்த் தோற்ற குளிர் ஒளித்ததுபோலத் தானும் மிக்க குளிர்ச்சி பொருந்திய குளிருக்குத் தோற்று இப்போது போர்க்கு விரும்பிச் சேறலை எவருங் கருதாத வளையல்களணிந்த முன் கையையுடைய பெண்களுடைய குங்குமச் சாந்தணிந்த தனங்களில் விரைவாகச் சென்று ஒளித்தது, மாறுபட்ட தம்முடைய பகைசார்ந்த தனங்கிடைக்குமானால் அதனைப் பொருந்தாதவர் யாவருளர்? ஒருவருமில்லை.

(வி - ம்.) இது பொழுது - இப்பொழுது; வெம்மை இப்பொழுது உடைந்து கரந்ததெனக் கூட்டுக. கண்ணா - ஈறுகெட்ட பெயரெச்சம் கையார் என்ற பெயரொடு முடிந்தது; குருகு - வளை; கொம்மென விரைவுக்குறிப்பு; தனம் முலையெனவும் நிதியெனவும் பொருள் கொள்க; பகை : ஆகுபெயர்; சிவணுதல் - பொருந்துதல்; பெட்டல் - ஈண்டு விருப்பின்கண்ணிகழுஞ் செல்லுதற் றொழிலை யுணர்த்திற்று; பெண்கள் தனம் சீதளகாலத்து வெம்மையினையும் வெம்மைக்காலத்துச் சீதளத்தினையும் தருமென்பது. "வாவியுறை நீரும் வடநிழலும் பாவகமும் ஏவனைய கண்ணாரிள முலையும் - ஓவியமே, மென்சீத காலத்து வெம்மைதரும் வெம்மைதனில், இன்பாருஞ் சீதளமேயாம்."(நீதி வெண்பா - 43) என்பதனாலறிக. இது வேற்றுப் பொருள் வைப்போடு கூடிய சிலேடையணி.

(16)

 உண்ட பாற்சுவை நினைந்தொரு முனிதவ
           முழந்துபாற் கடல்பெற்ற
 பண்டை நீர்மைதேர்ந் தமரரான் பயத்தின்முன்
           படிந்தநந் தியங்குன்று