| | நெஞ்சிடை யொன்றுவாய் நிகழ்வ தொன்றுமெய் | | | விஞ்சுற விளைக்குவ தொன்ற தாகவே | | | வஞ்சக நடைபயின் மடமை யேனையும் | | | அஞ்சலென் றாள்வையோ தணிகை யண்ணலே. |
(கு - ரை.) நெஞ்சிடை ஒன்று - நினைப்பது ஒன்று. வாய் நிகழ்வது ஒன்று - சொல்லுவது ஒன்று. விஞ்சுற மெய்விளைக்குவது ஒன்று - அவ்விரண்டையும் கடந்து செய்வது ஒன்று. வஞ்சக நடை - வஞ்சித்து ஒழுகும் ஒழுக்கம். மடமை யேனையும் - அறிவு ஒரு சிறிதும் இல்லாத என்னையும். தணிகை அண்ணலே நெஞ்சிடை ஒன்று, வாய் நிகழ்வது ஒன்று, மெய், விளைக்குவது ஒன்றதாகவே வஞ்சக நடைபயில் மடமையேனையும் அஞ்சல் என்று ஆள்வையோ? என்க. (44) | | அண்ணலம் பழமறை யதர்ப்பட் டுய்ந்திலேன் | | | புண்ணிய வடியரைப் போற்றி யுய்ந்திலேன் | | | கண்ணகன் றணிகையங் கடவுட் குன்றினாய் | | | பண்ணிய வினைதபப் பரிவு நாணிலேன். |
(கு - ரை.) அண்ணல் - பெருமை. அதர் - நெறி. போற்றி - வழிபட்டு. பண்ணிய வினைதப - முன்செய்த வினைவந்து விலக்கியதனால் பரிவு நாண் இலேன் - அன்பும், நாணும் இல்லாதவன் ஆனேன். தணிகையங் குன்றினாய், மறை அதர்ப்பட்டு உய்ந்திலேன்; அடியரைப் போற்றி உய்ந்திலேன்; வினைதபப் பரிவு நாண் இலேன் என்க. (45) | | நாணிலா னெனப்பிறர் நகைக்க மற்றெனக் | | | கேணிலாம் வினைப்பய னிருக்கி னேற்குமுன் | | | கோணிலா மிவ்வுட லருளிற் கொன்றிடாய் | | | சேணிலா வியபுகழ்த் தணிகைச் செல்வனே. |
(கு - ரை.) தணிகைச் செல்வனே, ஏண் நிலாம் - உன்னாலும் அழிக்க முடியாதவாறு வலிமை பொருந்திய. வினைப்பயன் எனக்கு இருக்கின் - வினைப்பயன் மேலும் நுகர்வதற்கு இருக்குமானால். ஏற்குமுன் - அவ்வினைப் பயன்வந்து என்னை அடைவதற்குமுன். கோள் நிலாம் - தீமைக்கு இருப்பிடமாக உள்ள. தணிகைச் செல்வனே, பிறர் நகைக்க எனக்கு ஏண் நிலாம் வினைப்பயன் இருக்கின் இவ்வுடல் அருளிற் கொன்றிடாய் என்க. (46) | | செல்வமு மதற்படு செருக்கு மேதகு | | | கல்வியு மதற்படு களிப்பும் பார்த்தொரீஇச் | | | சொல்வளர் ஞானமே துளையு மாறருள் | | | கல்வளர் தணிகையங் கருணை யாளனே. |
|