பக்கம் எண் :

1504தணிகைப் புராணம்

 அந்தி மாதரார் மயக்கலா ரீதென
           வயர்வதென் மடநெஞ்சே
 சந்த லார்பொழி லிணர்விரி தணிகையந்
           தடங்கிரி யரசாளும்
 கந்த வேண்ஞெமிர் தத்துவக் குழாந்தொறுங்
           கலந்துநின் றசைவிக்கும்
 இந்த நீரலா லிலையென வவருழை
           யெழுந்தொழி றனைக்காணே.

(கு - ரை.) அந்தி - மாலைவேளை. மயக்கு - காதல்நோய். ஆர்அல் - நிறைந்த இருள். அயர்வது - வருந்துவது. சந்தம் - அழகு, சந்தனமரம். இணர் - பூங்கொத்து. ஞெமிர் - பரந்த.

நெஞ்சே, மாதரார் மயக்கு அல் ஆர் ஈது என அயர்வது என்? பொழில் இணர்விரி தடங்கிரி அரசாளும் கந்தவேள் தத்துவக் குழாந்தொறும் கலந்து நின்று அசைவிக்கும் நீரலால் இலை என அவருழை எழுந்தொழில் தனைக் காண் என....க.

(55)

 காண மாதியெப் பொருள்களு மொருவர்தங்
           கைவயத் தனவன்றிப்
 பேண லாவதும் பிழைப்பதுங் காண்டலிற்
           பிரசநக் கலர்பைங்கோட்
 டாண நீள்பொழிற் றணிகையா னவரவர்க்
           கமைத்தன வருமென்றே
 கோண றாமட நெஞ்சுநன் றமைத்தியேற்
           குற்றமன் றொழிவாயே.

(கு - ரை.) காணம் - பொன். எப்பொருள்களும் - எல்லாப் பொருள்களும். பேணலாவதும் - ஒருவர்பால் மேவியிருப்பதும். பிழைப்பதும் - அவரைவிட்டு நீங்குவதும் ஆகிய செயல்கள் காண்டலின் - காணப்படுவதனால், பிரசம் - தேன். ஆண் - ஒரு வகை மரம். கோண் அறா - மாறுபாடு நீங்காத. அமைத்தியேல் - அவாவை அடக்குவாயானால்.

எப்பொருளும் கைவயத்தன அன்றிப் பேணலாவதும் பிழைப்பதும் காண்டலின் தணிகையான் அமைத்தன வரும் என்று நெஞ்சே நன்று அமைத்தியேல் குற்றம் அன்று ஒழிவாய்.

(56)

 வாய லாநலம் பயக்குமேற் பொய்ம்மையு
           மறுவிலார் சொலக்கண்டும்
 தூய காவிவெற் பிறையவன் றாட்டுணை
           தொழாரென வெவனெஞ்சே