| | தீய வாயின பிறருழை நினைக்கவும் | | | செப்பவுஞ் செயவன்னோ | | | நீய றாயிரம் உரையுரு வறாயிரம் | | | எனவுமுன் னிலைநின்றீர். |
(கு - ரை.) வாயல் ஆம் நலம் - இன்றியமையாத பொருத்தமான நன்மை. பயக்குமேல் - பிறர்க்குச் செய்யுமானால், மறு இலார் - குற்றமற்ற பெரியோர்கள். அறாயிரம் - ஆறாயிரம். முன்னிலை நின்றீர் - முன்வந்து நிற்கின்றீர். நலம் பயக்குமேல் பொய்ம்மையும் சொலக் கண்டும் இறையவன் தாட்டுணை தொழாரென எவன் நெஞ்சே தீயவாயின பிறருழை நினைக்கவும், செப்பவும், செயவும் அன்னோ நின்றீர் என்க. (57) | | நின்றி லாதவிவ் வுடலினை நிலையென | | | நினைந்துமற் றிதிற்சாலத் | | | துன்று நோயெலாந் துமித்தபிற் றணிகையாற் | | | றொழுதருள் பெறுகிற்பாம் | | | என்று நெஞ்சமே மட்சுவர் கழுவுவார்க் | | | கெதிர்ந்துவீண் படநாள்கண் | | | மன்ற நீத்தனை யினித்திரை யொழித்தகன் | | | வாரியா டுதிபோலும். |
(கு - ரை.) துமித்தபின் - சிதைத்தபின்; பெறுகிற்பாம் - பெறுவோம். மண்சுவர் - மண்ணாலெடுத்த சுவர். திரை ஒழித்து - அலைகளை நீக்கிவிட்டு. வாரி - கடல். உடலினை நிலையென நினைந்து நோயெலாம் துமித்தபின் தொழுது பெறுகிற்பாம் என்று நெஞ்சமே மட்சுவர் கழுவுவார்க்கு எதிர்ந்து நாள்கள் நீத்தனை; இனி, திரை ஒழித்து வாரி ஆடுதிபோலும் என இணைத்துப் பொருள் கொள்க. (58) | | போலி யானவை செய்யுளுட் கிடப்பினும் | | | புலவரன் னவைதேர்வார் | | | போலி யாயடி யார்குழாம் புகினுமுன் | | | புகருல கறியாகொல் | | | பீலி மாமயி லெதிரெதி ராட்டயர் | | | பெருவனப் பிளஞ்சோலை | | | வேலி யோங்கலந் தணிகையாற் குள்ளமே | | | மெய்த்தொழும் பினையாகாய். |
|