பக்கம் எண் :

1506தணிகைப் புராணம்

(கு - ரை.) போலி செய்யுளுட் கிடப்பினும் புலவர் அவை தேர்வார். போலியாப் புகினும் உன்புகர் உலகு அறியா கொல்? மயில் ஆட்டயர் சோலைவேலி ஓங்கல் தணிகையாற்கு உள்ளமே மெய்த் தொழும்பினை ஆகாய் என இணைத்துப் பொருள் கொள்க.

(59)

 காய லங்கிலை வேலினா னுலகெலாங்
           காவல்பூண் டெழின்மஞ்ஞைச்
 சாய லங்கனை யார்க்குவே ளெனத்தகு
           வாரையுந் தமரானோர்
 தீய லங்குகாட் டிடுவதோர்ந் திமனுளஞ்
           செதுவுட றழீஇச்செந்தேன்
 பாய லங்கலங் கடம்பணி தணிகையான்
           பதந்தொழா விஃதேலாய்.

(கு - ரை.) காய் அலங்கு இலை வேலினான் - விட்டுவிட்டு ஒளிர்கின்ற இலைவடிவமாகச் செய்த வேலினாற் பகைதடிந்து மஞ்ஞை - மயில். சாயல் - அழகு. அங்கனையார் - மகளிர். வேள் - மன்மதன். தீயலங்குகாடு - சுடுகாடு. அலங்கல் அம் கடம்பு - அழகிய கடப்பமாலை. ஏலாய் - மேற்கொள்ளாதே.

வேலினான் காவல் பூண்டு அங்கனையார்க்கு வேள் எனத் தகுவாரையும் தமரானோர் காட்டு இடுவது ஓர்ந்து உடல் தழீஇத் தணிகையான் பதம் தொழா இஃது ஏலாய்.

தணிகையான் பதம் தொழாமல் அழிந்து ஒழியும் தன்மை வாய்ந்த உடலை ஓம்பியின்புறும் தொழிலையே மேற்கொண்டிருக்கலாகாது என்பது குறிப்பு.

(60)

வேறு

 ஏலநா றிருங்கூந்த லிளையவராட்
           டயர்சோலை யேலங் காட்டும்
 நீலவார் சுனைச்சாரற் றணிகைநெடுங்
           கிரிபுரக்கு நிமல வாழ்வைச்
 சாலநாண் மலர்தூவித் தொழுதுவினைப்
           பெரும்பறம்பு தாக்க கில்லீர்
 ஆலமோ வெனக்கவற்று மடற்காலற்
           கெவன்செய்வீ ரறிவின் மாந்தீர்.

(கு - ரை.) ஏலம் - மயிர்ச்சாந்து. இளையவர் - மகளிர். நிமலவாழ்வு - முருகன். பறம்பு - மலை. ஆலம் - நஞ்சு. கவற்றும் - துன்புறுத்தும்.