| இளையவர் ஆட்டயர் சோலை ஏலங்காட்டும் சாரல் கிரி புரக்கும் நிமல வாழ்வை மலர் தூவித் தொழுது வினைப்பறம்பு தாக்ககில்லீர். கவற்றும் காலற்கு எவன் செய்வீர் மாந்தீர் என இணைத்துப் பொருள் கொள்க. (61) | | மாந்தர்காள் விழுங்கிநெடுங் காலமுமி | | | ழாவளற்று மறுக வீங்குப் | | | போந்ததோர் சிறுவரையின் வினைவிளைத்தீ | | | ருய்யுமா புகலக் கேண்மோ | | | காந்துவான் மணிமௌலிக் கடவுளர்நே | | | டருந்தணிகைக் கடவு ணெஞ்சின் | | | ஆய்ந்தபோ தடுத்தலர்நீ ரளித்தனவேற் | | | றிடர்துமிக்கு மருளான் மன்னோ. |
(கு - ரை.) அளற்று மறுக - சேற்றில் சுழல. சிறுவரை - சிறுபொழுது, கேண்ம் - கேளும். மௌலி - முடி. நேடு - தேடு. ஆய்ந்தபோது - விரும்பிய போழ்து. ஏற்று - ஏற்றுக்கொண்டு. துமிக்கும் - அழிக்கும். மாந்தர்காள், விழுங்கி உமிழா அழற்று மறுகச் சிறுவரையின் வினைவிளைத்தீர் உய்யுமா புகலக் கேண்மோ கடவுள் நேடு தணிகைக் கடவுள் நெஞ்சின் ஆய்ந்தபோது அளித்தன ஏற்று அருளால் இடர்துமிக்கும் என இணைத்துப் பொருள் கொள்க. மன், ஓ : அசைநிலைகள். (62) | | மன்னியபே ரன்புளத்து வளர்தோறு | | | மவன்கருணை வளரா நிற்குந் | | | துன்னியதோ ரன்புளத்திற் றொலைதோறு | | | மவன்கருணை தொலையா நிற்கு | | | மின்னிலைமை தேர்ந்தவன்ற னருள்கிடைத்தோர் | | | பெருவாழ்வு மெண்ணி யன்பாம் | | | அன்னிலையே குறிக்கொண்மி னருட்டணிகைப் | | | பெருமான்மெய் யருளிற் றாழ்ந்தே. |
(கு - ரை.) மன்னிய - நிலைபெற்ற. துன்னிய - பொருந்திய. குறிக்கொண்மின் - குறியாகக் கொண்டு ஒழுகுங்கள். அருளிற் றாழ்ந்து - அருளைப் பெறவிரும்பி. அன்பு வளர்தோறும் கருணை வளராநிற்கும்; அன்பு தொலைதோறும் கருணை தொலையா நிற்கும். இந்நிலைமை தேர்ந்து பெருவாழ்வும் எண்ணிப் பெருமான் அருளிற் றாழ்ந்து அன்பாம் அந்நிலையே குறிக்கொண்மின் என இயைத்துப் பொருள் கொள்க. (63) |