| | தாழ்ந்ததிறை திருமுன்னர்த் தயங்குமவ | | | னருண்முன்னர்த் தாழக் கண்டேன் | | | சூழ்ந்ததிறை திருக்கோயி றுலங்குமவ | | | னருளெங்குஞ் சூழக் கண்டேன் | | | வீழ்ந்ததிறை யுருப்படிம மவன்வடிவி | | | லாவடிவம் வீழக் கண்டேன் | | | வாழ்ந்ததிறை தணிகைவரை யவனருளா | | | னந்தநிலம் வாழக் கண்டேன். |
(கு - ரை.) தாழ்ந்தது - வணங்கினது. தயங்கும் - விளங்கும். தாழ - தங்க. சூழ்ந்தது - வலமாகச் சுற்றி வந்தது. சூழ - நிறைய. வீழ்ந்தது - விழுந்து வணங்கினது. வீழ - மேவ. இறை திருமுன்னர்த் தாழ்ந்ததும் அவன் அருள் தாழக் கண்டேன்; இறை திருக்கோயில் சூழ்ந்ததும் அவன் அருள் எங்கும் சூழக்கண்டேன்; இறை உருப்படிமம் வீழ்ந்ததும் அவன் வடிவிலா வடிவம் வீழக்கண்டேன்; இறை தணிகை வரை வாழ்ந்ததும் அவன் அருள்ஆனந்தநிலம் வாழக்கண்டேன். என இணைத்துப் பொருள் கொள்க. (64) | | கண்டவிழித் துணையவுணர்க் காய்ந்தபெரு | | | மானுருவ மன்றிக் காணா | | | விண்டமலர் வாய்விலங்கல் வீறழித்தான் | | | றிருப்புகழே யன்றி விள்ளா | | | துண்டவகஞ் செவிதணிகை யுயர்வரையான் | | | புகழமிழ்த மன்றி யுண்ணா | | | மண்டியநெஞ் சகம்வள்ளி நாயகன்மெய்த் | | | திறத்தன்றி மண்டா தம்மா. |
(கு - ரை.) விழித்துணை - இரண்டு கண்களும். விண்ட மலர்வாய் - விரிந்த மலர் போன்றவாய். விலங்கல் - கிரவுஞ்சகிரி. விள்ளாது - திறவாது. அகம் செவி - செவியகம். அமிர்தம் - பால், தேவருணவு. மண்டாது - பருகாது. விழித்துணை பெருமானுருவமன்றிக் காணா; மலர்வாய் திருப்புகழேயன்றி விள்ளா; அகஞ்செவி புகழமிர்தம் அன்றி யுண்ணா; நெஞ்சகம் மெய்த்திறமன்றி மண்டாது என்க. (65) | | மாமலவா தனைதாக்க வையகத்து | | | வந்துயங்கு மடமை நெஞ்சே | | | ஏமுறுமா மலமாதி யிடையொருவுந் | | | திருவெழுத்தை யியல்பி னோதித் |
|