பக்கம் எண் :

திருத்தணிகைப் பதிற்றுப்பத்தந்தாதி்1509

 தூமணியா லிருளொதுக்கிச் சுடரிமைக்குந்
           தணிகைவரைச் சூழல் வைகும்
 காமருவே லவனிறைவிற் பரானந்த
           வவசமாய்க் கலந்து நில்லே.

(கு - ரை.) மாமல வாதனை - கொடிய மும்மலங்களால் வரும் துன்பங்கள். வந்து - பிறந்து. உயங்கும் - வருந்தும். ஒருவும் - நீக்கும். திருவெழுத்து - "நமக்குமாராய" என்னும் மந்திரம். தூமணி - உருத்திராக்கம். பரானந்தம் - வீடுபேறு.

தாக்க வந்து உயங்கும் நெஞ்சே மலமாதி ஒருவும் எழுத்தை ஓதி மணியால் இருள் ஒதுக்கி இமைக்கும் சூழல் வைகும் வேலவன் நிறைவில் அவசமாய்க் கலந்து நில் என இணைத்துப் பொருள் கொள்க.

(66)

 நில்லாத நீடுலக நெடுவிசும்பி
           னெழுத்தென்ன நீங்கக் காட்டி
 ஒல்லாத மலவறிவு முயிரறிவும்
           பேரறிவா யொளிரா நிற்பக்
 கல்லார கிரிமுருகன் கலந்தளித்த
           சாக்கிரா தீதத் துண்மை
 வல்லார்க ளைந்தொழிலு மைந்தொழிற்கா
           ரணர்நிலையு மருவார் மாதோ.

(கு - ரை.) கல்லாரம் - நீலோற்பலம். கும்பி - நரகம். துய்ப்பார் - அனுபவிப்பார்.

உலகம் விசும்பின் எழுத்து என்ன நீங்கக் காட்டி மலவறிவும், உயிரறிவும் பேரறிவா யொளிரா நிற்ப முருகன் கலந்து அளித்த சாக்கிரா தீதத்து உண்மை வல்லார்கள் ஐந்தொழிலும் காரணர் நிலையும் மருவார் என இணைத்துப் பொருள் கொள்க.

(67)

 மாதர்மணி வடம்வருடப் புளகரும்புங்
           களபமுலை மடநல் லார்தங்
 காதனனி கூர்ந்தவரிற் காதலெலாந்
           தணிகைவரைக் கடவுட் செய்ய
 பாதமலர் தனிலிருத்தும் பாவனைவல்
           லாரவர்தாம் பரந்த கும்பி
 பூதலம்வான் றுறக்கமெனு மிவற்றறிவோ
           டுருத்திரிந்து போகந் துய்ப்பார்.