பக்கம் எண் :

திருநகரப் படலம்151

(இ - ள்.) அலகிட முடியாத அண்டங்களிலுள்ள பிரமர்களும் ஒப்பற்ற நகரமாகிய இத் தணிகையைப் போலச் செய்ய அன்ன வடிவமாகத் தம்முருவையொளித்துக் காணும்பொருட்டு வந்ததைப் போல ஒளியோடு கூடிய அழகிய காலணிகள் ஒலிக்கின்ற இனிய ஓசையைக் கவரும் பொருட்டு அழகிய அன்னப் பறவைகள் புணர்ச்சி நிகழுகின்ற மாடம் நுழையப்படும்.

(வி - ம்.) மாடம் புகப்படுமென வினை முடிவு செய்க. செண்ணம் - ஒளி, வடிவு. வண்ணம் - அழகு.

(124)

 கலவி யாற்றிய காலையும் புலவிக்கா லத்தும்
 குலவு தந்நடை குறைந்தமைக் கொக்குமா றொதுங்கும்
 நிலவு வெண்கரி வணக்கிய நிகரில்யாழ் தழுவி
 மலரு மின்னிசை யெழுப்புவர் மேனில மகளிர்.

(இ - ள்.) அந்நகரத்தில் மேன் மாடங்களிலுள்ள பெண்கள் (தந் நாயகரொடு) கலவிசெய்த காலத்தினும் (அவரோடு) சிறுகலாம் செய்த காலத்தினும், விளங்குகின்ற தங்கள் நடைகுறைந்த தன்மைக் கொப்ப நடக்கின்ற (தெய்வ லோகத்திற்) பொருந்திய வெள்ளை யானையை வணக்க (இசையால்) ஒப்பற்ற யாழினைத் தழுவி விரிந்த இனிய கானத்தை யெழுப்புவார்.

(வி - ம்.) ஒதுங்கும் - நடக்கும். வணக்கிய - வணக்க. மலரும் - விரிந்த. எழுப்புவர் - உண்டாக்குவர். யானை யாழிசைக்கு வயமாதலை "காழ்வரை நில்லாக் கடுங்களிற் றொருததல் - யாழ்வரைத் தங்கி யாங்கு" எனவரும் பாலைக்கலி 2 ஆம் செய்யுளா னறிக.

(125)

 தடவு மேனில மெழுக்கிடுந் தண்புன லாப்பி
 கடவு ளாப்பியுங் கங்கையுங் கவினுறுத் துவபூ
 மடல்வி ராவிய கற்பகத் திழையவண் வதிவார்
 படரெ லாந்தப வுண்பது பனிவிசும் பமிழ்தம்.

(இ - ள்.) பெருமை பொருந்திய மேன்மாடங்களை மெழுக்கிடுகின்ற குளிர்ந்தநீரும், சாணமும், காமதேனுவின் சாணமும் ஆகாய கங்கையுமாகும். (அம்மேன்மாடத்துள்ள பெண்களுக்கு) அழகைச் செய்வன பூவிதழ்களோடு கூடிய கற்பக மரங்களினுளவாகிய அணிகலன்களேயாகும். அம்மேன்மாடத்தின் கண்ணே தங்குகின்றவர்களால் துன்பங்களெல்லாம் நீங்க வுண்ணப்படுவது குளிர்ச்சி பொருந்திய தேவலோகத்தின் கண்ணுள்ள அமிழ்தமேயாகும்.

(வி - ம்.) புனலாப்பி - உம்மைத்தொகை. ஆமென ஒரு சொல்வருவித்து முடிக்க. கவினுறுத்துவன கற்பகந்தருமாபரணங்களாம். படர் - துன்பம். தப - நீங்க. உண்பது - உண்ணப்படுவது. கவின் - அழகு.

(126)

 முழவு வென்றதோ ளாடவர் மேனில முகத்துக்
 கழகம் விண்ணவர் கலவினர் கலைபல தெரிவார்