| (கு - ரை.) கொடை யாதும் இலார் - ஈகை சிறிதும் இல்லாதவர். குறையுற்று - குறைவேண்டி, வேண்டிய பொருளைப் பெற விரும்பி. உயங்குறுவீர் - வருந்தும் உலகீர். அண்மினிர் உய்யுமின் - நெருங்கி அருள்பெற்று உய்யுங்கள். கொடை இலார்கள் தமைக் குறையுற்று ஏத்தி உயங்குறுவீர் கொடையால் உயரும் தணிகைக் குருவை அண்மினீர் உய்யுமின் என இணைத்துப் பொருள் கொள்க. முருகனை அடைந்தோர் பெருநல மடைவர் என்பது குறிப்பு. (80) வேறு | | மின்னேர் மருங்கு லிடைதுமிய | | | விம்மி யெழுந்து புடைபரந்து | | | பொன்னேர் சுணங்கு குடிகொண்ட | | | புளகக் களபக் கனதனத்தீர் | | | தன்னேர் தணிகை யழகனெறுழ்த் | | | தடந்தோ டழுவப் பெற்றீரேல் | | | இந்நாள் காறுங் கழிநாளும் | | | பயனா ளாகு மியல்பீரே. |
(கு - ரை.) மருங்குல் - இடை. இடைதுமிய - இடையே ஒடிய. சுணங்கு - தேமல். புளகம் - மகிழ்ச்சி. களபம் - கலவைச்சந்தனம். எறுழ் - வலிமை. பயன் நாள் ஆகும் - பயன் தரும் நாட்கள் ஆகும். மருங்குல் துமிய விம்மி எழுந்து பரந்து சுணங்கு குடிகொண்ட களபக் கனதனத்தீர், அழகன் தோள் தழுவப்பெற்றீரேல் இந்நாள்காறும் கழிநாளும் பயன்நாள் ஆகும் இயல்பீர் ஆவீர் என்க. ஆவீர் என்பது வருவித்துரைக்கப்பட்டது. (81) | | பீர்பூத் தெழுந்த மணிமுலையும் | | | பிடரிற் குலைந்து விழுங்குழலும் | | | நீர்பூத் தெழுந்த வாட்கண்ணு | | | நிறைமுற் றொழிந்த துயர்நெஞ்சும் | | | வேர்பூத் தெழுந்த நுதலுமாய் | | | மேவார் போல வினைநல்லோய் | | | சீர்பூத் தெழுந்த தணிகைவரைச் | | | செம்மால் கலவி சிந்தியே. |
(கு - ரை.) பீர் - பசலை. பிடர் - புறங்கழுத்து. நிறை - உள்ளத்தின் உறுதி. வேர் - வியர்வு. நுதல் - நெற்றி. மேவார் - பகைவர். இனைதல் - வருந்துதல். |