| முலையும், குழலும், கண்ணும், நெஞ்சும், நுதலுமாய் இனை நல்லோய் தணிகைவரைச் செம்மல் கலவி சிந்தி என முடித்துப் பொருள் கொள்க. தணிகைவரை முருகனை நினைத்த அளவில் மனத்துயர் அகலும் என்பது குறிப்பு. (82) | | சிந்தித் தறியே னரைக்கணமுந் | | | தெரிசித் தறியே னொருகாலும் | | | வந்தித் தறியேன் கனவினிலும் | | | வழுத்தி யறியேன் மறந்தேனும் | | | பந்தித் தடர்க்கு மலஞ்சவட்டிப் | | | பரமானந்த மெனக்களித்தான் | | | கந்தித் தலருங் காவிவரைக் | | | கந்தன் கருணைக் கெதிருண்டோ. |
(கு - ரை.) சிந்தித்து - நினைத்து. தரிசித்து - பார்த்து. வந்தித்து - வணங்கி. வழுத்தி - புகழ்ந்து. பந்தித்து - கட்டி. அடர்க்கும் - வருத்தும். சவட்டி - மிதித்து அழித்து. கந்தித்து - நறுமணத்தைப் பரப்பிக்கொண்டு. எதிர் - ஒப்பு. சிந்தித்து அறியேன் தெரிசித்து அறியேன் வந்தித்து அறியேன் வழுத்தியறியேன் எனினும் அடர்க்கும் மலம் சவட்டிப் பரமானந்தம் எனக்கு அளித்தான் கந்தன் கருணைக்கு எதிர் உண்டோ என்க. எனினும் என்பது வருவிக்கப்பட்டது. "உண்டோ" - என்பதில் "ஓ" - எதிர்மறை. (83) | | உண்டு வீடென் றோர்ச்சியுமற் | | | றுலகின் முழுது மதுவது வாய்க் | | | கண்டு கேட்டுண் டுயிர்த்துற்றுக் | | | கலங்கிச் சுழலும் புலையேனை | | | மண்டு தீர்த்தந் தலமூர்த்தி | | | வடிவு மூன்று மாங்காங்குக் | | | கொண்டு காவி வரைத்தணிகைக் | | | குமர னாண்ட திறும்பூதே. |
(கு - ரை.) ஓர்ச்சியும் - உணர்வும். அது அது ஆய் - அவ்வப் பொருளாய் (பல்வேறு பொருள்களாய்). கண்டு கேட்டு உண்டு உயிர்த்து உற்று - முறையே கண், செவி, வாய், மூக்கு, மெய்களால் புலன்களை நுகர்ந்து. புலையேனை - கீழ்மகனாகிய என்னை. தீர்த்தம் தலம் மூர்த்தி வடிவு மூன்றும் கொண்டு - தீர்த்தமாகவும், தலமாகவும், மூர்த்தியாகவும் மூன்று வடிவம் கொண்டு. இறும்பூது - அற்புதமே ஆகும். |