பக்கம் எண் :

1516தணிகைப் புராணம்

உண்டு என்ற ஓர்ச்சியும் அற்று முழுதும் அது அதுவாய்க் கண்டு கேட்டு உண்டு உயிர்த்து உற்றுக் கலங்கிச் சுழலும் புலையேனை வடிவு மூன்றுங் கொண்டு குமரன் ஆண்டது இறும்பூதே என்க.

(84)

 இறும்பூ தீட்டுஞ் சகலத்தி
           லீண்டி யாண்ட தெனவியப்போ
 தெறும்போக் கிருளா ணவத்தழுந்திச்
           செயலற் றிருந்த வந்நாளில்
 உறும்பால் வினைக்கீ டானவுட
           லுதவிச் சகலத் துறுத்தன்னோ
 நறும்பூங் காவி வரைப்பெருமா
           னல்கு மதுமற் றோர்ந்தவர்க்கே.

(கு - ரை.) சகலர் - ஆணவம் கன்மம் மாயை என்னும் மூன்றுடனும் கூடியவர்கள். இவர்களுக்குக் காரணம், புரியட்டகம், தூலம் என மூவகைச்சரீரங்களுண்டு. தெறும் - அழிக்கும். பால் - ஊழ். நல்குமது - அருள்வதனை. ஓர்ந்தவர்க்கே - உணர்ந்தவர்களுக்கு. என வியப்போ - என்ன வியப்போ.

ஆணவத்தழுந்தி இருந்த அந்நாளில் பால்வினைக்கு ஈடான உடல் உதவிச் சகலத்து உறுத்துப் பெருமான் நல்குமது ஓர்ந்தவர்க்கு ஈட்டும் சகலத்தில் ஈண்டி ஆண்டது என வியப்போ என மாற்றிக் கூட்டிப் பொருள் கொள்க.

(85)

 தவர்க்கே யருளுந் தவவொழுக்கஞ்
           சாரா தவமே யுண்டுடுக்கும்
 அவர்க்கே தொன்று மருளானென்
           றறைவா ரறிவு நுணுகாதார்
 எவர்க்கே துண்டாம் வானரங்க
           ளிகலி யுகளும் பொழிறணிகைத்
 துவர்க்கே "ருவப் படைவேற்கைத்
           தோன்ற லருளா தொழிந்திடினே.

(கு - ரை.) சாராது அவமே உண்டு உடுக்கும் அவர்க்கு ஏதொன்றும் அருளான் எனப் பிரித்துப் பொருள் காண்க. துவர் - பவளம். கேழ் - நிறம்.

அறிவுநுணுகாதர் வேற்கைத் தோன்றல் தவர்க்கே அருளும், தவ ஒழுக்கம் சாராதவர்க்கு அருளான் என்று அறைவார்; (அவர் கூறுவது முற்றிலும் பொய்) அவன் அருளாது ஒழிந்திடின் எவர்க்கு ஏது உண்டாம் என்க. அவன் என்னும் சுட்டுப்பெயர் வருவிக்கப்பட்டது.

(86)