| மகளிர் முயக்கம் காமத்தை மேலும் மேலும் வளர்க்குமே யன்றித் தணிக்காது என்பதும் அதனை மாற்றவல்லது முருகன் அருளே என்பதும் இதனால் கூறப்பட்டன. (88) | | மாற்றீர் காமப் பெருவிழைவை | | | வளரீ ரிறைவ னிடத்தன்பைப் | | | பாற்றீர் நெறியற் றவரிணக்கம் | | | பற்றீ ரடியார் நல்லிணக்கம் | | | கூற்றீர் நுமக்கு நீரானாற் | | | குற்ற மொழிப்பான் றுயர்ப்படுத்தும் | | | தேற்றீஞ் சோலைத் தணிகைவரைச் | | | செம்ம றனைநொந் திடலாமே. |
(கு - ரை.) காமப் பெருவிழைவை - காமத்தில் கொண்டுள்ள பெரு விருப்பை. நெறியற்றவர் - கீழோர். இணக்கம் - நட்பு. கூற்றீர் - எமன். துயர்ப்படுத்தும் - துன்பத்தைச் செய்யும். செம்மல் - தலைவன். விழைவை மாற்றீர், அன்பை வளரீர், நெறியற்றவர் இணக்கம் பாற்றீர், அடியார் நல்லிணக்கம் பற்றீர், நுமக்கு நீர் கூற்றீர் ஆனால் குற்றம் ஒழிப்பான் துயர்ப்படுத்தும் செம்மல் தனை நொந்திடல் ஆமே என்க. "நேர்ந்திடல் ஆமே" - என்ற பாடம் பொருந்தாமை காண்க. 'கூற்றீர்' பன்மை இழிவுகுறித்து நின்றது. (89) | | ஆமே நமதா ருயிர்த்துணையென் | | | றமலன் றணிகை யெம்பெருமான் | | | தேமே வனசத் திருப்பாதஞ் | | | சேமித் துளத்துப் போற்றிலீர் | | | நாமே லவன்மெய்த் திருப்புகழை | | | நாட்டீர் நாட்டீ ரெவ்வாறு | | | போமே சறவு படவுலகப் | | | பொருண்மேல் விளைந்த பெரும்போத்தே. |
(கு - ரை.) ஏசறவுபட - துன்பம் உண்டாவதற்குக் காரணமாக, பழிச்சொல் உண்டாகுமாறு. பெரும் போத்து - உள்ளத்தில் உள்ள அவா, வெகுளி, அறியாமையென்னும் பெருங்குற்றங்கள். நமது ஆருயிர்த்துணை ஆம் என்று எம்பெருமான் திருப்பாதம் உளத்துச் சேமித்துப் போற்றீர், நாமேல் அவன் புகழை நாட்டீர் நாட்டீர் ஏசறவுபட விளைந்த பெரும் போத்து எவ்வாறு போம் என இணைத்துப் பொருள் கொள்க. |