| நாட்டீர் நாட்டீர் என்னும் அடுக்கு நாட்டுதல் இன்றியமையாதது என்பதை விளக்கி நின்றது. (90) வேறு | | போத்தனுக்கி யானந்தப் புணரியிற்றோய் வதுகருத்தேல் | | | நாத்திகமாம் பரமதத்து நவைமொழியா றொழுகுவீர் | | | ஆத்தனருட் டணிகைவரை யண்ணலரு ளானவின்ற | | | மூத்தமறை வழியருளே முன்னாக முன்னீரே. |
(கு - ரை.) அனுக்கி - கெடுத்து. ஆனந்தப்புணரி - பேரின்பக்கடல். நாத்திகம் - சூனிய வாதம், (கடவுளும், நல்வினை தீ வினைகளும், இனிவரும் பிறப்புக்களும் இல்லை என்று கூறுவது). நவை - தீயன. ஆத்தன் - கடவுள். நவின்ற - கூறியருளிய. மூத்த மறை வழி - பழமையான மறையின் நெறி. அருளே முன்னாக - அருளைப் பெறுவதே கருத்தாக. முன்னீர் - வழுவாது செல்வீர்களாக. அனுக்கித் தோய்வது கருத்தேல் நவை மொழி ஆறு ஒழுகுவீர் (அதனை விடுத்து) அண்ணல் நவின்ற மறைவழி அருளே முன்னாக முன்னீர் என்க. (91) | | முந்நீரிற் புனலன்றி முகில்சொரியா வாறேபோல் | | | நன்னீர்மைப் பொருளெல்லா நயப்பவருக் கருட்குருவாய்த் | | | தன்னீர்மைப் பதத்தழுத்திச் சதுமறையா கமத்தன்றிக் | | | கொன்னீர்மைத் தணிகைவரைக் கொற்றவன்மற் றருளானே. |
(கு - ரை.) முந்நீர் - கடல். புனல் - நீர். முகில் - மேகம். நீர்மை - தன்மை. நயப்பவர் - விரும்புவோர். பதத்து - திருவடியில். ஆகமம் - அறிவு நூல். 'முந்நீரின் புனலன்றி முகில் சொரியா வாறேபோல்' என்பது உவமை. 'நன்னீர்மைப் பொருள் எல்லாம் நயப்பவருக்குச் சதுமறை ஆகமத்தன்றித் தணிகைவரைக் கொற்றவன் அருளான்' என்பது பொருள். முந்நீரின் புனலன்றி முகில் சொரியா ; சதுமறை ஆகமத்து நன்னீர்மைப் பொருள் அன்றித் தணிகைவரைக் கொற்றவன் நயப்பவருக்கு அருளான் என்க. (92) | | அருளாழி தணிகைவரை யறக்கடவுள் கருணையால் | | | உருவாகி யருளானே லுயர்மறையு மறையொழுக்கும் | | | திருவாரு மைந்தொழிலுந் தீக்கையுமற் றெவைகளுமற் | | | றிருளாகி யெவ்வுயிரு மிடர்க்கடனின் றேறாவே. |
|