பரிசுத்தமாகிய தனங்களாகவும் கொண்டு நீண்ட (கோவிலின்மேலுள்ள) சிகரங்களாகிய பொன்னாலாகிய முடியை யணிந்து செங்கோலைச் செலுத்துகின்ற அழகையுடையது தணிகைமலை. (வி - ம்.) நீவி - கொய்சகம் ; ஆடையுமாம். அரைப்பட்டம் - ஒட்டியாணம். மேகலை - மேகலாபரணம். தொடை - மாலை. வால் அம்முலை - பரிசுத்தமாகிய தனம்; இளமை பொருந்திய தனமுமாம். நகரம் - கோவில். சீலம் - ஒழுக்கம். செயவெனெச்சங்கள் தொக்குநின்றன. (129) | சிகரமவிர்பொற் குடங்கொடுஞ்சி செம்பொற் கோயில் பலமதிலும் | | புகரில்கிடுகு மாடநிரை பூட்டி ளிடுத்த மணிவடமாம் | | நிகரில் வரைத்தே ரிவர்மால்பு நிரைசோ பானந் துணிநீரில் | | தகுகற் சுனைக ளணியாடி தவழ்வெள் ளருவி மணிவடமே. |
(இ - ள்.) மலையின் சிகரம் தேரின்கண்ணுள்ள அழகிய குடமாகும். தேரின் மேன்மொட்டு செம்பொன்னாலாகிய கோவிலாகும். கோவிலின் பல மதில்களும் குற்றமில்லாத தேரின் மரச்சுற்றாகும். இவ்வரிசைகள் தேரிற்பூட்டி விடுக்கப்பட்ட அழகிய தேரிழுக்கும் வடமாகும். அம்மலையிலேறுவதற்கு வரிசையாக அமைத்த படிகள் வரையாகிய தேரின்கணேறுதற்கு அமைத்த கண்ணேணியாகும். தெளிந்த நீரினாற் றகுதியுடைத்தாகிய நீர்ச்சுனைகள் தேரிற்கட்டிய அழகிய கண்ணாடியாகும். அம்மலையி லொழுகுகின்ற வெள்ளிய அருவிகள் தேரிற்றொங்கவிடப்பட்டுள்ள முத்துவடங்களாகும். (வி - ம்.) ஆம் என்னும் சொல் எல்லாவற்றோடும் தனித்தனி சென்றியைந்தது. குடம் - தேரிலுள்ள கும்பம். கொடிஞ்சி - தேர்மொட்டு. கிடுகு - மரச்சுற்று; "கிடுகுதேர் மரச்சுற்றின் பேர்" என்னும் நிகண்டானறிக. மணிவடம் - தேரிற்கட்டிய கயிறு. மால்பு - ஏணி. இதனை "மால்பிழைத்தா" ரென்னும் திருக்கோவையானறிக. துணி - தெளிவு. ஆடி - கண்ணாடி. மணி - முத்து. (130) | பிறவி தொறும்வேட் டருந்தவங்கள் பெரிது மிழைத்த சூர்முதலை | | நிறுவு கொடிமேன் மஞ்ஞையென நிறுத்த குமரன் றனதுவரை | | உறைவ தரிய தவமாக்கி யுயர்த்த வுகந்தார்ப் பெடுப்பனபோற் | | சிறைய மயிற்புள் ளினங்கோடி திரள்வேய்த் தலைநின் றகவுமால். |
(இ - ள்.) பல பிறப்புக்கடோறும் அரிய தவங்களைப் பெரிதும் விரும்பிச் செய்த சூரனாகிய முதல்வனைத் தனது வெற்றிக்கறிகுறியாக நிறுவுகின்ற கொடியின்கண்ணே மயிலென்று சொல்லும் வண்ணம் தங்கச்செய்த குமரநாயகனது வரையானது (மயில்கள்) தம்மிடத்துறைவதையே தவமாகச் செய்துயர்த்திவைக்க (அச்செயலுக்கு) விரும்பி முழக்கெடுப்பனபோலச் சிறகினையுடைய கோடிக்கணக்கான மயிற் பறவையின் கூட்டங்கள் மூங்கின் மரங்களினுனியினின்று ஆடுதலைச் செய்யும். (வி - ம்.) சூர்முதலை - சூரனாகிய முதல்வனை. முருகனதுவரை தன்னிடத்தும் மயில்கள் வாழ்தலையே தவமாகச் செய்துயர்த்திவைக்க வென்க. உகந்து - விரும்பி. ஆர்ப்பெடுப்பன - முழக்கெடுப்பன. அக |