பக்கம் எண் :

154தணிகைப் புராணம்

வும் - ஆகும். முருகன் கொடி மயிலென்பதனை "மணிமயிலுயரியமானா வென்றிப், பிணிமுகவூர்தி ஒண்செய்யோனுமென" வரும் புறம் 56ஆவது செய்யுளானறிக.

(131)

 செம்பொன் மேருக் கடையாகிச் சிறந்த கந்த மாதனமும்
 அம்பொன் மேருக் குடாதுதிசை யவிர்பொற் கந்த மாதனமும்
 உம்ப ரிறைதன் னிடந்தணவா வூக்க மறிந்து படர்ந்தனைய
 பைம்பொன் வரைக ளிரண்டுமிரு பாலு மதிலா யுடைத்தரோ.

(இ - ள்.) சிவந்த பொன்மயமாகிய மேருமலையினுக் கடைகல்லாகச் சிறந்த (நான்கனு ளொன்றாகிய) கந்தமாதன மென்னுமலையும் அழகிய மேருமலைக்குக் குடதிசையின் கண்ணே விளங்குகின்ற கந்தமாதன மென்னுமலையும், தேவர்கட்கிறைவனாகிய குமரநாயகன் (தணிகையாகிய) தன்னிடத்தினின்று மொருகாலும் நீங்காத வுள்ளக்கிளர்ச்சியையறிந்து வந்தாலொத்த பசிய பொன்மயமாகிய (ஆண்டுள்ள) மலைகளிரண்டையும் இரண்டு பக்கத்திலு மதிலாக வுடைத்து அத்தணிகைமலை.

(வி - ம்.) மேருக்கடையாகிச் சிறந்த கந்தமாதனம்-அடைகல்லாகவுள்ள நான்கனுளொன்றாகிய கந்தமாதனம். மேருக்குடாது திசைக் கந்தமாதனம் - மேருவின் மேற்கேயுள்ள ஒரு மலை. தன்னிடம்-தணிகையாகிய விடம். மதிலாயுடைத்து - தணிகை இவ்விரண்டு மலைகளையு மதிலாகவுடைத்தென்க. தணிகைமலையின் இரண்டு பக்கத்தினும் இரண்டு மலைகளுளவாகலின் இங்ஙனம் கூறினார். ஊக்கம் - உள்ளக்கிளர்ச்சி.

(132)

 கனைவெள் ளருவி கலித்திழியுங் கனக வரைமுற் றும்வளையா
 அனைய நதிபோற் றனைப்பாதி யவதி வளைந்து கடலகடும்
 இனைய வகழ்ந்து புகுநீத்த மிரைக்கு நந்தி நந்தினியும்
 நனைய வொருபால் வரைமதில்சூழ் நாம வகழி யெனவுடைத்தால்.

(இ - ள்.) வேகத்தோடு கூடிய வெள்ளிய அருவியொலித் திரங்குகின்ற மேருமலையை முற்றிலும் சூழாத அத்தன்மைத்தாகிய சாம்பூநதயாறுபோலத் தன்னைப் பாதி யெல்லைக்கண் வளைந்து கடலின் வயிறும் வருந்தும் வண்ணம் இடித்துச் செல்கின்ற வெள்ளம் ஒலி செய்கின்ற நந்தி நந்தினியை (மேற்கூறிய இருகந்த மாதனமாம்) வரைகளாகிய மதில்கள் ஒருபக்கத்து நனையச் சுற்றிய அச்சத்தைத் தரத்தக்க அகழியாகவுடையது அத்தணிகைமலை.

(வி - ம்.) மேருமலையை முற்றும் வளையாத சாம்புநத யாறு போலத் தணிகையானது தன்னை முற்றும் வளையாதிருக்கின்ற நந்தி நந்தினியென்னும் நதியை மதிலைச் சூழ்ந்த அகழியாக உடைத்தென்க. வரைமதில் - இருகந்தமாதனம் போன்ற இரண்டு மலையாகிய மதிலென்க.

(133)

 வரங்கள் வேட்டுப் படர்விண்ணோர் மண்ணோர் நாகர் யாவர்க்கும்
 இரங்கி யினிது கைதூவா தீத்தல் கருதி யெண்ணிறந்த