| 155 பைதரு கானத்துப் படர்நெறி யொதுங்கலின் |
| முந்துபர லுழந்த வெந்துயர்க் கொப்புள் |
| பிந்துபர லுழத்தொறூஉம் பிளந்துநீ ருகுப்ப |
| வியங்காச் செல்ல லிணையடி தாங்க |
| வெயிற்பகை யுழந்த வேர்ப்புற நனைப்பச் |
| 160 சூறை மாருதந் துறைத்துறை யெடுத்த |
| பூழி போர்த்த பொற்பறு மாசு |
| கலுழ்நீ ரல்லது கயந்தலை யின்மையிற் |
| கழுவுதல் புரியா முடைபயில் காயமோ |
| டிலையின் மராத்த நிலையின் மென்னிழற் |
| 165 சேய்வரல் வருத்தஞ் சிதைபாக் கசைந்து |
| வாற்றா நின்னுளத் தவலமினி யொழிக |
| புளிஞரு மருளும் போக்கருஞ் சுரத்து |
| வீற்றுவீற் றொழுகு மாற்றினிற் றிரியா |
| 170 தொருநெறி யெதிர்ப்பா டுற்றது முன்னைப் |
| பழுதறு பெருந்தவப் பயனது போலும் |
| விழும வெந்துயர் முழுதொரால் வேண்டிற் |
| பாணியா தின்னே காணிய வெழுமதி |
| தோறேர்க் கோடுந் திருகுகோட் டிரலையி |
| 175 னோய்ப்பகை யென்ன வாய்ப்பிலா தமையு |
| மடுத்தடுத் தியானு மலமரு காலை |
| யூரூர் வைகிய சீர்கெழு மாந்தரு |
| ளுண்டி கலவி யுறுதொழின் முதலா |
| மண்டிய பகுப்பின் வரையறைப் படாது |
| 180 வேறுவே றுயிர்க்கும் வெம்பிணி யாளருங் |
| கருவி போழ்ந்த பெரும்புண் ணுறுநருங் |
| குட்டம் பெருநோய் முட்டிய வாத |
| முயலக னாதி மொய்ப்பிணி யுழவரும் |
| பாப்புக் கோளாதிப் பலவகைக் கடிஞரும் |
| 185 பேய்கோட் படுநரும் பித்துமீக் கூர்நரு |
| முறுப்புக் குறைநரு மொண்குண மிழநரு |
| மின்ன பஃறிறத் தெனைவரு மன்றிக் |
| கல்விவேட் டவருங் கான்முளை வீழ்நருஞ் |
| செல்வம் வீழ்நருந் தேயநா டுநரு |