| | 190 மலர்முலை மடவார் கலவிகா முறுநரு |
| | மிரண்டறு கலப்பி னின்பநச் சுநரு |
| | மினையபல் வேறு நினைவின ரெவரும் |
| | வாட்டுவ தணப்பவும் வேட்டன மணப்பவு |
| | மேற்கொண் டெழுந்து மேனா ணேர்ந்த |
| | 195 பொற்கிழித் திரளும் பூந்துகின் முடையும் |
| | மணிப்பூட் பேழையும் வார்தரு கவரியும் |
| | பைம்பொற் கவிகையுஞ் செம்பொற் சிவிகையு |
| | மூர்தியுங் கொடியும் வார்விசி முரசுஞ் |
| | சூட்டுவா ரணமுந் தோகைய மயிலுந் |
| | 200 தத்தமக் கியன்ற தழீஇயினர் போது |
| | மோசைதிக் கதிர்க்கு மாசனப் பெருக்கங் |
| | காண்டொறுங் காண்டொறு மீண்டிய களியே |
| | னுடங்குசென் றிருப்பா னொருப்பட் டெழலுந் |
| | துன்னிய விழுமநோய் தன்ன ரீங்க |
| | 205 வுறுதுயர் யாக்கை சிறிதுவலி யெய்த |
| | வொய்யெனக் கிளர்ந்த வுவகைநெஞ் சத்துப் |
| | படர்பே ரூக்கம் பிடர்பிடித் துந்த |
| | வெழுந்தன னிம்மென வேகுத றொடங்கி |
| | யடிபெயர்த் தோறு மஞர்ப்பிணி நழுவ |
| | 210 வுவரி நீரிற் றவவெழு மகிழ்வா |
| | லவன்மிசை பாடாஅ வனைத்து நெறியாகச் |
| | சென்றன னடுத்து மன்றனகர் நுழைதலும் |
| | வெருவுநோ யிருகூற் றொருகூறு விலங்கக் |
| | காட்சி யார்வங் கையிகந் தீர்த்தலின் |
| | 215 நறுமணங் கமழு நந்திநதி குடையா |
| | தெழுமுனி வரர்த மெழுசுனை யாடா |
| | தலைமலைப் பகைஞ னருட்கயம் படியாது |
| | நாக வண்சுனை நன்புன றோயாது |
| | விண்டு தீர்த்த மேவரக் குளியா |
| | 220 தலசவ னிருஞ்சுனை யழிபுனன் முழுகா |
| | சரவணப் பொய்கைத் தடம்புனற் றுளைந்து |