| மென்மெலக் குன்ற மீமிசை யிவர்ந்து |
| காலை நண்பகன் மாலைமுப் போதும் |
| 225 வைகல் வைகன் மலர்மூன்று தெரிக்கும் |
| நீலப் பைஞ்சுனை நேர்கண்டு தொழுது |
| புரண்டனர் சூழும் பொற்பினர் மிடைதலி |
| னடியிடப் படாஅ வாரிடை வீதி |
| யொதுங்குபு பைப்பைய வொருமுறை சூழ்ந்து |
| 230 தூவுமெண் ணிலத்துத் தோயாது வெறுத்த |
| தேவர்கள் குழுவுந் தேயத் தொழுதியுந் |
| தடைஇய வாய றடையாது நுழைந்தாங் |
| கொருவர்மெய் மணிப்பூ ணொருவர்மெய் வடுச்செய |
| நெருங்கிச் சென்று நித்தில வாணகை |
| 235 வள்ளி நாயகி மணத்தினை முடித்த |
| கள்ள வேழக் கடவுளைப் பணியா |
| வீரரொன் பதின்மர் வார்கழ றாழ்ந்துமற் |
| றாவயின் வதியு மமரரைத் தொழுது |
| பூதப் பகுப்பும் பூதகா ரணமு |
| 240 மிந்தியக் கூட்ட மிரண்டுமுக் குணமு |
| நந்துமாங் காரமு நலத்தகு கரணமு |
| மிறுவாய் மாயை யெழுவா யேழுஞ் |
| சுற்ற மென்னத் தோன்றிய வைந்தும் |
| விராய்நின் றியக்கி மராதுநின் றொளிரு |
| 245 மாரா வின்ப வருணிலை யம்ம |
| தீரா மலப்பிணி தீர்த்தருள் கொழிப்ப |
| வருட்டிரு வுருவுகொண் டவிர்மணித் தவிசின் |
| ஞான சத்தியுங் கிரியா சத்தியும் |
| வானவர் கோமான் வளம்பயின் மகளுங் |
| 250 கானவர் நலங்கூர் கன்னியு மென்ன |
| விரண்டு பாலு மிருந்தனர் களிப்பக் |
| கண்டமெய் யடியர் கலவினர் போற்றக் |
| காணா விண்ணவர் கலவா தேத்தக் |
| கட்கடை யொழுகுங் கருணை நோக்கமோ |
| 255 டினிதுவீற் றிருக்கு மெழினேர் காண்டலு |
| மெஞ்சுநோய் துவர விரியல் போக |
| விஞ்சுநாற் பொருளு மேவந்து துவன்ற |
| வாற்றாக் கடுந்துய ரருநர குழப்பவர் |
| நோற்றமுன் னூழ்நனி நூக்கலு நொடிப்பி |