பக்கம் எண் :

1534தணிகைப் புராணம்

 260 னாயிடை நின்று மாயிருந் துறக்கம்
           புக்குழிப் பொலிவித் தொக்கதோற் றத்து
           விம்மித மகிழ்ச்சி மெய்தவ வீக்க
           வொருகதி விட்டுமற் றொருகதி யடைந்தவர்
           மயங்கறி வென்ன வுயங்குமுன் னுயங்க
 265 லெய்யே னாகி யிறுமாப் பெய்தி
           செய்முறை தெரியாது திருமுன் னிற்ப
           விருமைப் பயனு மெளிதினுற் றளிக்கும்
           பூதியுந் திருவுருப் பூச்சுநன் களித்திட்
           டென்னைத் தன்வச மாக்கிய வுலகை
 270 யென்வச மாக்கி யென்றுமோ ரியல்பி
           னின்றதன் னிலையி னீங்கா திருத்தி
           விடாதுவிட் டருள மெய்யருண் மேற்கொண்
           டொழியா தொழிந்து வழிவரு கின்றன
           னத்தகு பெருமா னருள்விளை யாடலைச்
 275 சற்றிது கேண்மதி தவமேம் படுந
           விச்சொன் றின்றி விளைவுமிக் காக்கியும்
           விச்சுமிக் கிருப்ப விளைவுமுழு தொழித்து
           மொளிதலை வளர்ப்ப வொளிகளைத் தணித்து
           மழுக்கினைக் கழுவ வழுக்கினை யேற்றியு
 280 முறுந்தொழி லாளர்க் குறாதுசே ணகன்றும்
           வறுந்தொழி லாளர்க் குவந்துடன் கலந்தும்
           விதித்தநல் விதிகளை விலக்கென வுவர்த்தும்
           விலக்கினை விதியென மேதக நயந்து
           மித்தகு தொழின்மை நித்தலு மியற்றிப்
 285 பொற்றபே ரின்பருள் பெற்றிய னஃதான்
           றிருமுது குரவ ரெழுவாய்ச் சுற்றமொடு
           துயரிலங் குலகந் தோற்றுதற் பொருட்டுத்
           தந்தை யென்ன வைந்துமுக னாகியு
           மன்னை யென்ன மனோன்மனி யாகியும்
 290 முன்முறை தந்தையர் தாய ரென்ன
           நாதஞ் சிவமே நலத்தகு விந்து
           மேதகு சத்தி வேறுவே றாகியும்
           பின்முறை தந்தையர் தாய ரென்ன
           மகேச னுருத்திரன் மகேசையுமை யாகியுந்