பக்கம் எண் :

திருத்தணிகையாற்றுப்படை1535

 295 தமைய னென்னத் தந்திமுக னாகியுந்
           தனைய னென்னத் தாமரை மருட்டு
           மூவிரு முகமு முன்னான்கு கரமு
           மருவி வீற்றிருக்கு மொருதா னாகியுங்
           கடப்படு மிரண்டு கைகோ ளியங்க
 300 நான வார்குழ னகையிழை யானையைக்
           கானவ ரரும்பெறற் காமரு மாதினைக்
           கற்பினிற் களவினிற் பொற்புற மணந்தும்
           பொருட்டுறை முழுதும் புரையின்றி நடப்ப
           வண்டகோ டிகளு மரைக்கணத் தளவையின்
 305 வறிதுநகை தோற்றி யிறுவது புரியு
           மெறுழ்வலி யாற்ற லெய்யான் போல
           மந்திரந் தூது செலவிகன் மற்று
           மாற்றிவெஞ் சூர்வலி காற்றியுல கோம்பியு
           மெல்லா மறிந்தறி விக்குமவ் வியல்பைக்
 310 கண்கூ டாகக் காட்டுவ னதாஅன்று
           மூவகை யுருவாய் மூவுல குயிர்த்து
           மூவகை யுருவு முயங்காப் பரம்பொருள்
           பந்தம் வீடு பல்லுயிர்க் கமைத்தும்
           பந்தம் வீடு படாத பெருந்தகை
 315 யாருயிர்க் குயிரா யமைந்தன நடாவியு
           மாருயிர் காட்சிக் கணுகா வருந்திறற்
           றானாய் நின்று தற்காண் டனிமுத
           லளிகளி னளியா வளிகளூஉங் களிய
           னொளிகளி னொளியா வொளிகளூஉங் கொளியன்
 320 வெளிகளின் வெளியா வெளிகளூஉங்கு வெளிய
           னளவினி னளவா வளவினூஉங் களவ
           னின்னா னொருவனை முன்னுபு சென்றவன்
           பூங்கழற் சேவடி போற்றுதி யாயின்
           பேரஞ ருறுத்த பேதுறு நோயுங்