பக்கம் எண் :

1536தணிகைப் புராணம்

 325 காரண நோயுங் கையிகந் திரியக்
           கடைக்கணித் தருளிக் கரையினாற் பொருளுங்
           கொடைக்கட னீயிர் குறித்த வளவையி
           னெண்மடங் காற்றி யென்றுந் தீரா
           வகம்படித் தொழின்மையி னழுத்துவ னன்றே
 330 யாடகப் பசும்பொற் பாடகச் சீறடி
           நாடக மகளிர் நவற்றிய வாடற்
           சிலம்பு கிண்கிணி தீங்குழன் முழவ
           முரசந் தூரி முழங்கொலி யானும்
           விண்டல முரிஞும் வியன்மணிப் புரிசைக்
 335 கொண்டல்கண் படுக்குங் கோபுர நிரைக
           ளாடுகொடி சுமந்த மாடநெடு மாளிகை
           யின்னன பிறவு மன்னுத லானு
           மொலிதிரைக் கடலு மோங்குபல் வரையு
           முடங்குதொக் கண்மி யொண்டுறை யாடி
 340 யிருபகுப் பினவா யிருகரை மருங்கும்
           நோற்றன வதியும் பேற்றினைத் தெரிக்கு
           மும்மையு மளிக்கு மூவா முழுமுத
           லைம்முக னாகி யமர்ந்தவீ ரட்டமு
           மறுமுக னாகி யமர்ந்தகீழ்க் கோட்டமும்
 345 பொன்னு மணியும் புதுமலர்க் குவையும்
           திரைக்கயிற் றூஉய்த் திளைத்தெழுந் தொழுகு
           நந்தி யாற்று நறும்புனன் மடுக்குங்
           குரங்குகதிர்ச் சாலியுங் கொழுந்தீங் கரும்புங்
           குலைப்பூங் கதலியுங் கோட்டெங் கினமுங்
 350 கோள்கண்மீப் பரிக்கும் பாளைக் கமுகும்
           வயின்வயிற் பொதுளி வளம்பல வுறந்த
           முருகலர்ப் பண்ணை யொருபுறஞ் சூழ
           வவரை துவரை யரிற்கதிர் வரகு
           சாமை யிறுங்கு ததைந்தன விளையுங்
 355 கொல்லை முல்லை கோழிணர்ப் பூவையும்
           பந்தர் மாதவி யுந்திய கோங்கும்
           பைங்காழ் கொன்றை பசும்போற் சுண்ணமும்
           வளியுளர்ந் தெடுப்ப மறுபுல வரைப்பும்
           போர்த்தன கமழ்ந்து பொறிவண் டழைக்கு