பக்கம் எண் :

திருத்தணிகையாற்றுப்படை1537

 360 மரும்புலப் புறவ மொருபுறஞ் சூழச்
           செருந்தி மந்தாரங் குருந்துவழை பாடலம்
           கோங்கு சண்பகம் வேங்கைமகிழ் சந்தனம்
           குங்கும மரவங் கோழகிற் கப்புர
           மில்ல மாவிரை வில்லம் பாங்கர்
 365 பிடர்ஞெமை நமையாண் டடர்வரை யெகின்சே
           வசோகந் தேக்கே யாத்தி சூத
           மருது போதி வஞ்சி காஞ்சி
           ஞாழல் புன்னை நரந்தை மாதுளை
           பொகுட்டரை யிருப்பை பூஞ்சினைச் சரள
 370 முன்னம் பலாசு முருக்கை வருக்கை
           சோதி மாமரந் தொத்தின நாக
           மன்றி யனைத்துந் துன்றிய கறிக்கொடி
           மல்லிகை முசுண்டை மற்றும் பரித்து
           மணங்கமழ் காமர் வல்லி யொன்றே
 375 யிணங்குபூத் தருந்த னிகழ்ச்சியை நாடி
           வசைபடத் தத்த மிசைவிளக் குவபோற்
           பொறிவரிச் சுரும்பும் வெறிநுகர் தேனுந்
           தோகைமா மயிலுந் தொடிக்கட் பூவையுங்
           கிள்ளையுங் குயிலுந் தெள்ளுகுரற் காட்டி
 380 வண்டளிர்ப் பொதும்பர் மருங்குகால் வளைஇ
           நுண்டளி நறுந்தே னோலாது திவளுந்
           கதைமலர்ச் சினைய தருவைந் துடுத்த
           பொன்னகர் வறுமையை முன்னிநக் காங்கு
           வேர னரன்றுக்க வெண்மணிக் குப்பையும்
 385 பிறழ்பற் பேழ்வாய்ப் பின்முன் பார்வைச்
           சிங்கவல் லேறு பொங்கு சினந்திருகி
           யெழுந்துதாய்த் துமிப்ப விருங்கடா யானை
           மத்தகம் பிளந்து மாயிருங் குன்றத்து
           வெண்புன லருவி வீழ்வன போலச்
 390 சலசல வுக்க தரளக் குவாலு
           நிலவுராய்த் தவழ நெமிர்ந்தன மிளிருங்
           கவான்மலைப் புனத்துக் கதிர்த்தினை காக்கு
           முவா மதிமுகத்தா ரோச்சினர் விடுக்குங்
           கவணையின் மணியோ கங்குற் கானவர்