| | 395 விலங்கினந் துரக்கு மிலங்குகூர்ங் கணையோ |
| | வலைத்தர விசும்பி னிலைத்தரு கலன்கள் |
| | பல்வகை மின்கொடி யொல்கிவீழ்ந் தென்ன |
| | வெல்வரை நிரையும் பில்குகதிர் மணிப்பூங் |
| | காழுந் தாமமுங் கவினத் ததைஇய |
| | 400 மண்டப மேடை மாடமே னிலைக |
| | ளியங்கா நிலைத்தே ரியங்குமணிப் பஃறேர் |
| | விமானவூர் திகளும் வேற்றுமை தோற்றா |
| | வளம்பல தழீஇயெம் மருங்குமெய் யடியா |
| | ரிடுமகிற் றூமமு மெக்கரிற் குவைஇய |
| | 405 படரொளி யூட்ட பளிதக் குப்பை |
| | கான்றதீம் புகையுங் கழுமி விண்கெழுமி |
| | யிமையார் நாட்ட மிமைப்பன செய்ய |
| | மல்ல லாவண மறுகும் வீதியு |
| | நாடொறு மெழிலா னவநவ மாகி |
| | 410 யிமைக்குநர் நாட்ட மிமையாமை செய்ய |
| | மண்டலம் விண்டல மாற்றிய தென்ன |
| | விறும்பூது பயவா வேர்குலாய்க் கிடந்த |
| | திசைகாப் பாள ரிசைநிறை தேவ |
| | ரலரவ னெடுமா லாதிய கடவுளர் |
| | 415 முதுக்குறை யன்பின் முறைமுறை பழிச்சச் |
| | சாறுநா ளல்லது வேறுநா ளறியா |
| | துலகமுழு தோம்புபல் சிறப்பி |
| | னிலைபெறு தணிகை மலைகிழ வோனே. |