பக்கம் எண் :

1540தணிகைப் புராணம்

சீரார் தொடைபுனைந்த செம்பாவை - சீரும், தொடையுமாகிய வுறுப்புக்களால் தொடுக்கப்பட்ட செந்தமிழ்ச் செய்யுளை, நேராகக் கூட்டும் - நேர்மைப்பட வொப்புவித்து, எப்பொருளும் - (ஆற்றுப்படை யென்பதற்கேற்ற) எவ்வகைப்பட்ட பொருட்செறிவையும், காட்டும் - தெரிவித்தருளும் என்க.

ஐங்கைக்களிறு முன்போல வேற்றுருவங் கொள்ளாமை தணிகையிளவற்குச் செம்பாவை நேராகக்கூட்டி யெப்பொருளுங் காட்டுமென முடிக்க. இளவற்குச் செம்பாவை யென்பது விளக்கிற்கு நெய் என்பதுபோ னின்றது. முன்போல் என்றதற்கேற்ப இற்றைநாளென்பது விருவிக்கப்பட்டது. ஏர்பு என்பது குறைந்து நின்றது. கூட்டும் என்பது வினையெச்சமுற்று. ஆல் இரண்டும் அசைநிலைகள்.

ஐங்கைக் களிறு முன்புபோல் வேற்றுருவங் கொள்ளாமைக் கூட்டுமென்றதால், செம்பாவை போலும் வள்ளி நாச்சியாரை முன் இருகோடும் ஒரு கரமுமுள்ள காட்டுயானை வடிவாய்த் தோன்றி, இளவற்குக் கூட்டினவாறுபோலன்றி, இற்றை நாட்கண் ஒரு கோடும் ஐந்து கைகளும் உடைய வியற்கையுருவாய்த் தோன்றி நின்று செந்தமிழ்ப் பாவைக் கூட்டுமென்றவாறாயிற்று. நேராக என்றதால் முன் நாச்சியாரை வழித்தடை செய்து அச்சுறுத்திப் பின் புணர்த்தினவாறுபோலன்றி, இற்றை நாளில் அடியேனை அஞ்சல் செய்யும் இடையூறு நீக்கிச் செம்பாவை நேர்ச்சியுறுத்து மென்றதாயிற்று. இரட்டுறமொழிதலால் சீரார் தொடைபுனைந்த செம்பாவை யென்றதனை மென்மைமிக்க மணமாலை புனைந்த செம்பொற் பாவையென நாச்சியாருக்குரைக்க. செம்பாவை செம்பொற்பாவை போல்வார் என விரிதலா லுவமைத் தொகைப்புறத்துப் பிறந்த அன்மொழித்தொகை நிலை. இதில் பாவையையென இரண்டனுருபு விரிக்க. செய்யுட்கெனின் அவ் வுருபு விரிந்தே நின்றதாகலான், இவ்வகைத் தொடர்களை "வேற்றுமை யுருபுகளல்லா தனவும் வேற்றுமை யுருபுகள் போல்வெளிப் படுமே" என்று கூறினது நுட்பவிதியா லுணர்க.

நூல்

பொன்மலை என்பது முதல் ஆரா துகைப்பவுமென்னுமளவும் ஒரு முடிபு.

(வி - ம்.) (1 - 2) பொன்மலைத் திருவில் பன்னக நெடுநாண் மாயப்பகழித்தாயக் குரிசில் என்பது - மாமேருவாகிய பெருமையுள்ள வில்லிற்கும், சேடனாகிய நெடிய நாணிக்கும், மாயோனாகிய அம்பிற்கும் உரிமையையுடைய இறைவனது,

தாயக்குரிசில் என்றதால் ஏனையோர்க்கு அவை அவ்வாறாதற் குரிமையுடையவல்ல வென்பதாயிற்று.

(3 - 4)முரணமை இருகால் திரள்மறைப் புரவி அலர்மரை வாழ்க்கை வலவத்தேரும் - திங்களும் ஞாயிறுமாகிய சக்கரங்களையும்,