| நான்மறைகளாகிய பரிகளையும், அலர்ந்த தாமரைப் பூவின்கண் வாழ்தலுற்ற நான்முகனாகிய பாகனையும் உடைத்தாகிய தேரும், குரிசிலது தேரும் எனக் கூட்டுக. முரண் என்றது - வெண்மை செம்மை இரவினும் பகலினு மாறிவருதல் பற்றி. திரள் என்றது. பலவாதல் பற்றி. அலர்ந்த தாமரை - திருமாலுந்தித் தாமரைமலர். உம்மை சிறப்பும்மை, முப்புரங்களையும் அழித்தற்கு உடம்படுதியென இந்திரன் முதலோர் வேண்டிக் கொண்டதற்கு இணங்கிய இறைவன் அது தவறானாகி அவற்றின் மேல் சென்ற ஞான்று, பொன்மலையும், பன்னகமும், மாயனும், தத்தமுருத் திரிந்து, முறையே வில்லும் நாணும் பகழியுமென்றாகியும், அவை தமக்கேற்ற வகையில் போர்புரிதற்கு அமையாதனவாய் நின்றனவெனினும், தத்தம் இயற்கைத்தொழிலான் உலகை நிலைபெறுத்தலும், பூமியைச் சுமந்து தாங்கலும், உலகைக் காத்தலும் என்னுமத் தொழிற்கண் அமைவனவாய் நின்றமையின், இந்நூல் கேட்பார் ஊழ்வலியானுந் தீமையணுகாராய் நல்லவையே பெறுவரென்பது கருதி நூலாசிரியர் அவ் வரலாற்றைக் குரிசிலுக்கு அடைமொழியாகக் கூறினரென்றுணர்க. (5 - 7) வழங்குதற்கமையா வண்மையி னிசைக்கும் பெருந்தகுபாடல் திருந்திசைப் புலவர் அறன்கடைக்கு அகலாப்பிறங்கு தம்முளத்தின் - கொடுத்தற்கியலாத பெருநலமுடைய சொற்களா லிசைக்கப்படுகின்ற மேதக்க பனுவலுணர்ச்சி நிறைந்த புகழ்மையுடைய அறிஞரது தீயன எண்ணுதற்கு ஒரு போதும் விரியாத தெளிந்த இதயத்தை யொத்த, அறிஞ ரிதயமெனக் கூட்டுக. (8 - 9) சாலாக்கல்வி மாலார்க்கு அகலா வரன்மாண்டு அமைந்த உரன்மாண் பலகையில்-நிரம்பாத கல்வி மயக்கமுடையபுன் புலவரணுகி யிருத்தற்கு விரியாத வரங்களால் பெருமைமிக்கதாய் நிறைந்த புலமையை நிறுத்துக்காட்டவல்ல சங்கப் பலகையினிடத்தே, புலவருளத்தை யொத்த பலகை யென்க. (10 - 11) தண்டா விருப்பின் எண்டோண் முதல்வனோடு ஆனாது பயிலிய அருமறைக்கேள்வி - இடையறாத அருளொடு வீற்றிருந்த அவ் விறையனாருடன் பிரிவின்றிப் பயின்றுள்ள அருமையான மறைகளின் நெறியுணர்ச்சியாகிய இன்பத்தினையும், இறையனார் சிவபெருமானே ஆதலால் எண்டோண்முதல்வ னென்றார். வேதநெறியை வேதமென்றது ஆகுபெயர். பயிலியவென்னும் எச்சப்பொது கேள்வியென்னும் தொழிற்பெயர் கொண்டது. இறைவனது தேராகிய நிலன் பிறராற் கவரப்படும் நிலையின்மையவான பொருள்களைத் தருவதாதலானும், அவ்வாறன்றிச் சங்கப்பலகை கற்று வல்ல சான்றோர் முகமாக அவர்க்கும் பிறர்க்கும் பயன்படும் நிலையுள்ளனவாகிய அற |