| விளங்குசீ ரிளமையும் - விரல்கொண் டழுத்திடின் உள்ளாழாதபடி உடம்புதசை திண்ணியதாய் மணங்கமழ்கின்ற மலர்மாலை புனைந்த கரிய கூந்தலுள்ள மாதரிடத்தே நோய்படும் உள்ளத்தை யொப்புவித்து, அரிய அறிவு முதலியவற்றைத் திறைபடுத்தா நின்ற கட்டழகு கிளர்ந்த இனிமை மிக்க விளமைப்பருவமும், உயிரி னியற்கையாகிய அறிவை யுயிரென்ற தாகுபெயர், (21 - 23) பல்வகைத் தொழிலும் பண்புற நவின்று சிந்தைவழிச் செலும் ஐந்தும் நிலைபெறீஇயர் அளவினைத்திறத்தின் அயரா யாக்கையும் - இயமநியம முதலிய பல யோகவுறுப்புக்களையும், அதன் அதனதியல்பின்கட் குறையாமல் முறையே முற்றி உட்புலனாகிய மனம் போனவாற்றால் செல்லா நின்ற ஐம்பொறிகளும், அவை நுகர்வனவாகிய வோசை முதலிய வைந்து மடங்க அகப்படுத்தின அறவோர்க்குரிய ஒழுக்கங்களைப் பாகுபாடறிந்து நோற்கப்பெறாத வுடம்பும், திறத்தின் - ஆற்றலுக்கேற்ப வெனினுமமையும். (24 - 25) அளகைக் கோமான் உளம் அழுக்கறுப்ப நிலம்தினக் கிடந்த நெடுநிதிச் செல்வமும் - அளகைக் கிறையான நிதிக்கிழவனும் தன் மனம் பொறாமையுறுமாறு நிலனும் சுமக்கல் ஆற்றாது வருந்துமாறு கிடந்த பெரிய பொருட்செல்வமும், (26 - 29) நீடின்று இரியும் நிலைமை நாடி ஏற்போர் அங்கைக் கொடைக்கடன் இறுத்து நோற்போர் நோற்கும் நோன்மைசால் அறனெனும் உறுதி ஆக்கம் ஒய்யெனக் கழலவும்-நிலைமையின்றிக் கழிகின்ற தன்மையை யுள்ளுணர்ந்து இரப்பவர்களுக்கு இல்லையென்று சொல்லாமல் ஈதலாகிய கடப்பாட்டினைச் செய்து வண்மையை விரதமாக் கொண்டார் அதனையிகவாது காவாநின்ற பெருமைமிக்க தருமமென்னும் உயிர்க்குறுதிபயக்கும் பேறு நிலைநில்லாமற் கழியவும், இன்றி என்பது இன்று எனத் திரிந்து நின்றது. நீடு : முதனிலைத் தொழிற்பெயர். இளமையும், யாக்கையும், செல்வமும் இரியும் நிலைமை நாடிக் கொடைக் கடனிறுத்து நோற்கும் உறுதியாக்கம் கழலவும் என முடிக்க. வரைத்திர ளென்பது முதல் நேர் நடாவியும் என்னுமளவும் ஒரு முடிபு. (30 - 31) வரைத்திரள் புரள்வின் திரைத்தெழும் திரைக்கணம் விலங்கின வழங்கும் விழுக்கலன் செறித்தும் - மலைகள் திரண்டு புரண்டு வரிசை வரிசையாய் வருவதுபோன்று சுருண்டு சுருண்டு மேல் எழுந்து வரும் கடலின் அலைகள் ஒதுங்குமாறு அவற்றைப் பிளந்து ஓடுகின்ற பெரிய வங்கமேற் சென்று பொருள்களை யீட்டியும். உம்மை எதிரது தழீஇய எச்சவும்மை. (32 - 34) ஒளிறுவேல் அழுவத்து உருத்தெழுந்து அடர்த்து குளிறுவார் முரசும் பிளிறும்மால் யானையும் வைத்த |