| (83) மயில் இயல் மருளும் இயல்மட மாதரை - மயிலினது சாயலும் மருளுகின்ற சாயலையு மடப்பத்தினையு முடைய மாதர்களை, 'மயில் இயலும்'--என்பதன் உம்மை விகாரத்தால் தொக்கது. சில்லோதி முதல் சீரடியும் இயலுமுடைய மாதரையென முடிக்க. சீலமென்பது முதல் அழற்று நோய் என்னுமளவும் ஒரு முடிபு. (84 - 85) சீலம் விழைவே செயல் குறி இவற்றான் நால்வகைப் பேதமும் மாலறத் தெரிந்து - அவரது ஒழுக்கமும் உள்ளத்தின் வேட்கையும் செய்கையும் குறியுமாகிய இன்ன கருவிகளால் நான்குவகை வேறுபாடுகளையும் ஐயப்பாடின்றி யுணர்ந்தவராய், *"எண்ணேகார மிடையிட்டுக் கொளினு மெண்ணுக் குறித்தியலு மென்மனார் புலவர்" என்றாராகலின் எண்ணேகாரத்தைச் சீல முதலியவற்றோடுங் கூட்டுக. நால்வகைப் பேதமாவன - வாலை, தருணை, பிரவுடை, விருத்தை யென்பன. இவை மாதர் பருவங்களென்பர். (86) மருந்தும் மந்திரத்தும் திருந்து விழைவேற்றி - மருந்தினானும் மந்திரத்தினானும் தன்னோடியைபுற மாறுபடாத வேட்கையை அவர்க்குள தாமாறு பெருக்கி, மருந்து - அமிர்த நிலையறிந்து பரிசித்தல். மந்திரம்-மதனது மறையை அதற்குரிய தானத்தில் எழுதுதல். இவை வேட்கையை மிகுவித்தற்குத் தொடக்கத்தில் செய்யத்தக்க இன்றியமையாக் கருவிகளென்பர். பெருகல் - முன் உள்ள அளவின் மேற்படுதல். (87 - 89) தேயம் பயிற்சி சேட்டை இயல்பே இன்பத்துறையே இருவகைத் தொழிலே இங்கித வகையே இவை நனி நாடி - தேயமும் குணமும் அவத்தையும் இயற்கையும் இன்பத்தின் பாகுபாடுகளும் இருபாலதான தொழிலின் பாகுபாடுகளும் எண்ணக் குறிப்பின் பாகுபாடுகளுமாகிய இவற்றை மிக நன்கு ஆராய்ந்து, எண்ணேகாரத்தைத் தேய முதலியவற்றோடுங் கூட்டுக. உலகத்துள்ள தேயந்தோறும் பிறந்த மாதரது தருமம் உள்ளம் செய்கை முதலியவற்றை விசாரித்துத் தேறுவது தேய நாடலாம். தேவர் முதலிய கணவகையுணின்ற மாதரை வாதம் பித்தம் சிலேட்டுமம் யறிவது பயிற்சி நாடலாம். வாலை முதலிய பருவங்கட் குரைத்த காலங்களையும் உள்ளத்தின் வேட்கையினையும் பகுத்தறிவது | * | தொல்காப்பியம் - சொல்லதிகாரம் - இடைச்சொல்லியல் - 290-வது சூத்திரம். |
|