| சேட்டை நாடலாம். மானினி முதலிய மாதர் சாதியும் சசன் முதலிய ஆடவர் சாதியுமான மரபுக் குட்பட்ட அவ்வவர் குறிகளின் பரிமாணங்க ளின்னனவென்றறிவது இயற்கை நாடலாம். புல்லுதல் சுவைத்தல் முதலிய புணர்நிலை வகைகளை யறிவது இன்பத்துறை நாடலாம். புணர்ச்சி யமயத்தின்கண் புடைத்திடல் வழிபடலென்னுமிரண்டனையு மறிவது இருவகைத் தொழினாடலாம். கிராமியம் பௌத்திகம் முதலிய கரணங்களாகிய புணர்ச்சிப் பாகுபாடுகளறிவது இங்கிதவகை நாடலாம். இவற்றை விரிக்கிற் பெருகுமென விரித்திலம். (90 - 93) இருவகைப் பொழுதொடும் ஏற்ப மருவிய மூன்று காலமும் மூன்று வேகமும் ஒப்பக்கலவி உஞற்று பேரின்ப அவாவுளம் பொதிந்து கொண்டு அழற்று வெம்படர் நோய் - பெரும் பொழுது சிறு பொழுதுகளில் பொருந்துமாறு உற்ற முக்காலங்களும் மூன்று வேகங்களும் பிறழாதபடி கலவி புரியா நின்ற பெரிய இன்பத்தின்கணுள்ள பேராசை உள்ளத்தை காமமாகிய தீயை மூடிக்கொண்டு மூட்டுதலாலுண்டாகின்ற கொடிய துன்பத்துக்கு ஏதுவான நோய், கார்கால முதலிய ஆறும் பெரும் பொழுதாம், மாலைக்கால முதலிய ஆறும் சிறு பொழுதாம். மாதர் விரும்புமாறு அவரவர்க் கேற்ற ஆடவர் புணர்தற்குத் தக்க வமயம் காலமாம். அது மூவகை எனவும், விரைவு, சமம், தூக்கு என்பன வேக மெனவுங் கூறுவர். முன்னர்க் கூறிய சீல முதல் வேகம் என்பதன்றுணையுமுள்ளவற்றின் பொருள்களை யொருவாற்றானுரைத்தாம். இன்னும் விரிக்கின் மிகப் பெருகு மாகலின், இவையெல்லாவற்றையும் ஒருங்குணர வேண்டின், வடமொழியுள் உள்ள இன்ப நூலினுணர்ந்து கொள்க. இனிச் சீல முதலியவற்றால் தெரிந்து ஏற்றித் தேய முதலியவற்றை நாடிக் கலவியுஞற்று மின்ப அவாப் பொதிந்துகொண் டழற்று நோயென முடிக்க. (94 - 95) தவாது பிறைபோலத் தணிவின்றி வளரவுவாமதிபோல வுருவேதபவும் - அந்நோய் இடையின்றி இளம்பிறை வளர்ந்து வருவதுபோலத் தீர்வின்றி வளர்தலால் நிறைமதி குறைந்து வருவது போல உடம்பின் வலிமை முதலியவை நாள்தோறுங் குன்றாநிற்பவும், நோய் வளர்தலால் உருவேதபவும் என முடிக்க. தபுதல் ஒருதலையாகலின் உருவேயென்றார். ஏகாரம் தேற்றத்தின்கண் வந்தது. பொருளடையால் உவமை யடைகள் வருவிக்கப்பட்டன. கடவுட் பொங்கர் முதல் தெளிவினை போலா தென்னு மளவும் ஒரு முடிபு. (96 - 98) கடவுட் பொங்கரும் தடமருப்பு ஆவும் சிந்தாமணியும் நந்தா நிதிகளும் கலன் முதலான பலவளங் கொழிப்ப-தெய்வத் தன்மையுள்ள ஐந்தருக்களும் பெரிய கோடுள்ள காமதேனுவும் சிந்தாமணியும் கெடாத ஒன்பது நிதிகளும் ஆகிய அவை அணிகலன்கள் முதலிய வெவ்வேறான பொருள்களை வேண்டியாங்கு வரையாது கொடா நிற்பவும், |