பக்கம் எண் :

1554தணிகைப் புராணம்

மாறும் எல்லாவற்றிற்கு முதலாய் நிற்கும் கடவுள் கண்கூடாகக் காணப்படுகின்ற குரவனாகி,

முதற் கடவுள் குருவாகியென மாறுக, அறியாமை அகங்காரம் அவா விழைவு வெறுப்பு முதலிய தத்துவக் குழாத்தினைத் தொலைச்சித் தான் தனியா யிறைவனிடத்தே நிற்றலைத் தானாநந்தலும் மடங்கலுமென்றார். எனவே பசுஞான நீக்கமென்றவாறாயிற்று. கட்காண் குருவென்றதால் முதற் கடவுள் அருளானன்றிக் காணப்படானென்பது,

 'வேறுஆ காமையானு மறிவினு ணிற்றலானு
  முன்னிய வெல்லா முண்ணின் றுணர்த்துவ னாதலானு
  மென்னது யானென்றோது மிருஞ்செருக் கறுத்தலானுந்
  தன்னறி வதனாற் காணுந் தகைமைய னல்லனீசன்'

என்னும் சித்தியார் 6 ஆவது சூத்திரம் 8 ஆவது திருவிருத்தத்தாற்
கண்டுகொள்க.

(115 - 118) உயிரே அவத்தை உணர்த்துந் தன்மை அருளினியல்பே ஆங்கதன் பயனே பெரும்பெயர்த் திறமே பெற்றவர் முறையென்று அனைவகை யேழும் அரில்தபத் தெரிப்ப - உயிரும் அவத்தைகளும் அவற்றை விரவிக் காரியப்படுத்தாநின்ற தன்மையும் அருளினியற்கையும் அவ்வருளின் பயனும் இறைவனியல்பும் இறைவனடியை யடைந்தார் முறையுமென வேதாகமங்களா லுணர்த்தப்படுகின்ற அவ்வேழு பாகுபாடுகளையும் ஐயமற வறிவுறுத்தலால்,

அனையவகை யென்பது குறைந்து நின்றது. தெரிப்ப என்பதனை எல்லாவற்றோடுங் கூட்டியுரைக்க. உயிரைத் தெரிவித்தலாவது அளவற்றதாய விஞ்ஞானகலர் பிரளயாகலர் சகலர் என மூவகைத்தாய் என்று முள்ளதாய்ச் சத்தசத்துக்களைப் பகுத்துணர்தற் றன்மைத்தாய் இருளும் ஒளியுமல்லாத கண்ணியல்பிற்றாய் நிறைவிற்றாய் உணர்த்த உணர் சிற்றறிவிற்றாயுள்ள தென்பது. அவத்தைகளைத் தெரிவித்தலாவது நனவு, கனவு, உறக்கம், பேருறக்கம், உயிர்ப்படக்கம் என ஐந்தென்றும், இவற்றிற்குத் தானங்கள் முறையே புருவநடு, அது தொடுத்துக் கண்ட முடிவு, அது தொடுத்து இதயமளவு, அது தொடுத்து நாபியீறு, அது தொடுத்து மூலாதார வரை யெனவும், இவற்றின் கருவிக் கொத்துக்கள் முறையே ஐந்து நான்கு மூன்று இரண்டு ஒன்றாம் எனவும், அன்றியும் கேவலம் சகலம் சுத்தம் எனக்காரணாவத்தை மூன்றாமெனவும் தேற்றுதலாம். இவற்றை உணர்த்துந் தன்மை தெரிவித்தலாவது முறையே உயிர் ஒருவர் உணர்த்த உணர்தலானும், சடங்கள்போ வழியாமையானும், சதசத்தாய்ச் சுதந்தரவீனனென நிற்குமென்றும், கீழாலவத்தைச் Not Keyed