| நியமங்களை மேற்கொண்டு ஆண்டாண்டுச் சென்று வணங்கித் தியானித்தும் (தீராமைபற்றி) கவலைப் பிணியொடு பொருந்தின நெஞ்சம் இனிச் செய்யப்படுவதோர் செயலின்றி இரங்காநிற்ப, கெழு "வேல்கெழு தடக்கை" யென்றதுபோ னின்றதோ ரிடைச்சொல். விரதம் ஒருபோ துணவு கோடல் முதலியன. நியதி சிறப்புச் செய்தன் முதலியன. ஆதி யென்றதால் உண்டி சுருக்கல் பட்டினி கிடத்தல் சாந்தி செய்வித்தல் கோயில் வலம் வரல் முதலியவுங் கொள்க. (146) சேண் சென்று ஒரால் செய்து என வலித்து - சேய்மைக்கண் பல தேயங்களிற் சென்று இதனை ஒருவுதல் செய்வேன் எனத் துணிந்து, துவ்வீறு ஈண்டு இறந்தகால வினையெச்சப் பொருட்டாய் நில்லாது, எதிர்கால ஒருமைத்தன்மை முற்றுச் சொல்லீறாய் நின்றது. ஒருவல் ஒரால் என இடை நீண்டு விகுதிமுதல் குறைந்தது. (147 - 150) மிக்க நோய்க்கு இரங்கும் ஒக்கல் புறந்தழுவ வறுமைக் கவற்சியும் இறுகுறப் பிணிப்ப இல்லுந் தமரும் இசை பயில் நாடும் மென்மலக் கழீஇ - துன்பத்தை மிகுவிக்கின்ற நோய்கள் ஒழியாமையால் தாமுந் துன்புறுகின்ற சுற்றம் தன் புடைசூழ்ந்துவர வறுமையென்னுங் கவலைநோயும் உறுதியாகப் பற்றியாக்க அச் சுற்றமாகிய தன்றுணைவியையும் தந்தை தாயர் முதலிய கிளைஞரையும் தாமிசையுடன் பயின்றுள்ள நாட்டினுள்ளாரையும் மெல்ல மெல்ல விடுத்துத் தானீங்கி, (151 - 155) விரிகதிர்ப் படையால் இருள்கால் சீக்கும் எழுபரித் தேரோன் கடுஞ்சினம் திருகிய கொடுமைகூர் வேளையில் முளிமுதல் முருக்கிய முழங்கு அழல்போழ்ந்து வளியுலாய்ப் புறத்தும் வழங்குநர் தெறூஉம் பைதறு கானத்துப் படர்நெறி ஒதுங்கலின் - எங்கும் பரவின கதிர்க்கற்றை யாகிய படைக்கலத்தினால் இருட்பகையைத் தள்ளுகின்ற ஏழென்னு மெண்ணுப்பெயர் பெற்ற புரவிகட்டின தேரூர்தியாகிய சுடரவன் மிக்க தனது வெப்பமுதிர்ந்த கொடுமை செய்கின்ற காலத்தின்கண் பட்ட மரங்களின் அடி வேர்களையும் வெப்ப மிகுதியால் கீழ்நிலத்து மூடுருவிப் பசையறப்பண்ணின கட்டழலைப் போழ்ந்து அவ்வெப்பத்தை மேற்கொண்டு சூறாவளி அந்நில மெங்குமுலாவி அயற்புறங்களி லியங்குவாரையும் வாட்டுதற்கிடமான துயருறுத்தும் பாலைக்கண்ணே கல்லதரிற்போதலால், கால்சீத்தல்: ஒருசொல். எழுபரித் தேரோன் என்பது சுடரவ னென்னுந் துணையாய் நின்றது. இவ்வமயம் வேனிற் பருவம் Not Keyed |