பக்கம் எண் :

1558தணிகைப் புராணம்

கொள்க. கயந்தலை தொடுகுளம் அடுக்குப் பன்மை நோக்கி நின்றது. கயந்தலையின்மை இடத்தி னிகழ்பொருளிடத் தின்மே னின்றது. சேய் : ஆகுபெயர். பாக்கு ஓரெச்ச விகுதி; ஈண்டுத் தொழிற்பெயராய் நின்றது. பிணிக்கோட்பட்டு மனத்தானாகித் தொலைச்சி இகழா மடுத்து உருப்ப ஒழிய காண்பாம் எனப் படிந்தும் பணிந்தும் காணாமை புறநகர்க் கோட்டமும் தொழிலொடு படர்ந்து ஏத்தியு மினைய சேட்சென்று ஒரால் செய்தன வலித்துத் தழுவப் பிணிப்ப மென்மலக்கழீஇ நெறி யொதுங்கலின் நீருகுப்பத் தாங்க நனைப்ப காயமொடு அசைந்து உயிர்ப்பெறிந்து நினைதரு மிரவல என முடிக்க.

(167) ஆற்றாநின் னுளத்து அவலம் இனி ஒழிக - நினது மனத்தினிடத் தான குறைவுபடாத அவலத்தினை இதுபோழ்தே ஒழித்திடுதி,

இரவலநின் னுத்தவல மொழிக வெனவியையும்.

(168 - 173)புளிஞரு மருளும் போர்க்கருஞ் சுரத்து வீற்றுவீற் றொழுகும் ஆற்றினில் திரியாது ஒருநெறி எதிர்ப்பாடு உற்றது முன்னைப் பழுதறு பெருந்தவப் பயன் அதுபோலும் விழும வெந்துயர் முழுது ஒரால் வேண்டின் பாணியாது இன்னே காணிய எழுமதி - மறவர்களும் (அந்நில மாக்கள்) அஞ்சாது செல்லுதற்கு இயலாமை மயக்குறுகின்ற போதற்கருமைத்தான பாலைக்கண் வேறு வேறு கூறாய்ப் பிரிந்து செல்லா நின்ற அந் நெறிகளுள் யாதொரு வேறு நெறியே பிறழ்ந்து செல்லாதபடி நீயும் யானும் ஒருங்கோர் நெறிக்கண்ணே எதிர்ப்படுதலைப் பெற்றது முற்பிறப்பி லியற்றிய மாதவத்தின் பயனது விளைவு போல்கின்றதாகலின் நினது வெய்ய துன்ப நோயனைத்தினையும் ஒழிதலை விழைந்தனையாயின் காலந் தாழ்க்காமல் இதுபோழ்ழ்தே நான் நின்பொருட்டு மேற்கூறும் பரம்பொருளைக் காணுமாறு எழுவாயாக,

உம்மை சிறப்பும்மை. முழுதும் என்பதில் முற்றும்மை தொக்கது. இன்னே என்பது விரைந்தகாலப் பொருட்டாய இடைச்சொல். பாணியாது பாணியென்னுந் தொழிற் பெயரடியிற் பிறந்த மறைவினை யெச்சம். மதி முன்னிலை வினைக்குரியதோ ரசை. பயன்: ஆகுபெயர். போலுமென்ற மிகையான் எதிர்ப்பாடு ஒரோவழித்தபு மாயின் ஆற்றுப்படுத்த லமையாமையும், அதனால் தவப்பயனின்மையும் குறிப்பிக்கப்பட்டது. சுரத்துத் திரியாது எதிர்ப்பாடுற்றது முன்னைத் தவப்பயன் போலும் அதனால் துயர் ஒரால் வேண்டின் பாணியாதெழுமதி யென முடிக்க.

(174 - 176) தோல் தேர்க்கு ஓடும் திருகுகோட் டிரலையின் நோய்ப்பகை யென்ன வாய்ப்பிலா தமையும் அடுத்தடுத்து யானும் அலமரு காலை - கானலைப் புனலென்று கருதி அதன் பொருட் டோடுகின்ற திருகுதலையுற்ற கொம்புகளையுடைய மான்போல எனது முன்னை நோய்களைத் தீர்த்தற்குப் பகையென அமைவுபெறாத பயனற்ற பரிகாரங்களையும் விரத முதலியவற்றையும் மாறாது செய்தும் பயன்பெறாமே யானும் நீ யுழன்றவாறு உழன்ற வமயத்தின்கண்,