| அன்றி - அல்லாமல், (188 - 192) கல்வி வேட்டவரும் கான்முளை வீழ்நரும் செல்வம் வீழ்நரும் தேய நாடுநரும் அலர்முலை மடவார் கலவி காமுறுநரும் இரண்டறு கலப்பின் இன்ப நச்சுநரும் இனைய பல்வேறு நினைவினர் எவரும் - கல்விப்பொருளைக் காதலித்தாரும் மக்கட்பேற்றினை யிச்சித்தாரும் செல்வப்பொருளை அவாவினாரும் தேயவரசியலை விரும்பினாரும் மார்பிட முற்றும்பரந்த முலைகளையுடைய மாதர் புணர்ச்சியைக் காமுற்றாரும் இரண்டறக் கலப்பினதாகிய பேரின்பத்தை விழைந்தாருமாகிய இன்ன வெவ்வேறு வகைப்பட்ட நினைப்புள்ளார் பலரும், இரண்டறு கலப்பி னின்ப நச்சுதல் பதிபசுபாசங்களைச் சிறப்பியல்பானுணர்ந்து தேறின ஞானநிலை கிடைத்து ஆணவக்கட்டினை யறுத்து ஆனந்தப்பேறு மருவிப் பாசத்தை யொழிவதும் பதியிற் புகுவது மில்லா வொரு நிலைமைத்தான வியல்பின்கண்ணே ஞாதுரு ஞான ஞேயங்களை யொழியாதொழிந்து சுடரவனைப் புணர்ந்த விழிபோல அப் பதியுடனே பேரின்பந்துய்க்கும் வாழ்வை நயத்தலாம். (193) வாட்டுவ தணப்பவும் வேட்டன மணப்பவும் - தம்மை வாட்டும் அம் மூவகைத் துன்பங்களையும் நீக்கிக் கொள்ளுதற்காகவும் தாம் வேண்டும் அக் கல்வி முதலியவற்றையும் பிற வின்பங்களையும் பெற்றுக்கொள்ளுதற்காகவும், மாந்தருள் வரையறைப்படாது உயிர்க்கும் பிணியாளரும் புண்ணுறுநரும் பிணிக்கோட் படுநரும் உழவரும் கடிஞரும் மீக்கூர்நரும் குறைநரும் இழநரும் எனைவருமன்றி வேட்டவரும் வீழ்நரும் நாடுநரும் காமுறுநரும் நச்சுநரும் வேறு நினைவின ரெவரும் தணப்பவும் மணப்பவுமென முடிக்க. மேற்கொண் டென்பது முதல் தன்ன நீங்க என்னுமளவும் ஒரு முடிபு. (196 - 199) மேற்கொண்டெழுந்து மேல்நாள் நேர்ந்த பொற்கிழித் திரளும் பூந்துகில் முடையும் மணிப்பூண் பேழையும் வார்தரு கவரியும் பைம்பொற் கவிகையும் செம்பொற் சிவிகையும் ஊர்தியும் கொடியும் வார்விசி முரசும் சூட்டு வாரணமும் தோகைய மயிலும் - விரதத்தினை மேற்கொண்டெழுந்து முன்னை நாளின்கண் தாம் தாம் வேண்டிக்கொண்டவாற்றால் பொன் முடிப்பும் பூந்தொழிலையுடைய துகிற்பொதியும் மணியணிப் பெட்டகமும் நீட்சியுற்ற சாமரையும் மாற்றுயர் பொன்னாலாகிய குடையும் பொன்னாலாகிய (not keyed)கோழியும் தோகையையுடைய மயிலும் ஆகிய இவற்றை, முடை முதலியவை சாதி யொருமை, (200 - 204) தத்தமக்கு இயன்ற (not keyed) போதும் ஓசை திக்கு அதிர்க்கும் மாசனப் (not keyed 2 lines) |