பக்கம் எண் :

1570தணிகைப் புராணம்

அரையர் பகைவர்மாட்டு மந்திரம் தூது முதலிய இவை செயற்பாலனவென்னும் அறநூற் பொருளை யுணர்த்தற் பொருட்டு இங்ஙன மியற்றினவாறு. இருமுது குரவராகிய முதற் சுற்றமொடு உலகம் தோற்றுதற்பொருட்டு ஐம்முகன் முதலிய இறைவரும் மனோன்மனி முதலிய சத்திகளுமென வேறு வேறாகியும் மகேசனு முருத்திரனும் இவர் சத்திகளும் தந்தி் முகனும் தாமுமாகியும் ஞானக்கிரியைக ளியங்க யானையையும் மாதையும் மணந்தும் பொருட்டுறை நடப்பத்தோற்றிப் புரியும் ஆற்றலெய்யான்போல மந்திர மற்றும் ஆற்றிச் சூர்வலி காற்றி யோம்பியும் அறிந்து அறிவிக்கும் அவ் வியல்பைக் காட்டுவ னென முடிக்க.

அஃதான்று - அதுவன்றி,

மூவகை என்பது முதல்-அளவனென்னுமளவும் ஒரு முடிபு.

(311-312) மூவகை உருவாய் மூவுலகு உயிர்த்தும் மூவகை உருவும் முயங்கா பரம்பொருள் - அயனரியரனென முத்தொழிற் கடவுளராய்ப் பெரிய வுலகங்களைப் படைத்துக் காத்து அழித்தும் அம் மூன்றுருவையுங் கலவாது நின்ற மெய்ப் பொருளாய்,

மூவகை யுருவென்றதால் இனம்பற்றி ஏனையிரு தொழில்களுங் கூட்டியுரைக்கப் பட்டன.

(313-314) பந்தம் வீடு பல் உயிர்க்கு அமைத்தும் பந்தம் வீடு படாத பெருந்தகை - பந்தமு முத்தியும் பல்வகை யுயிர்கட்கும் அமைத்தும் அப் பந்த வீடுகளுள் தாமுயங்காது நிற்கும் பிரானாய்,

சிவஞான சித்தியார் - முதற்சூத்திரம் - 44-வது செய்யுள் "பந்தமும் வீடுமாய பதபதார்த் தங்க ளல்லா, னந்தமு மாதி யில்லானளப்பில னாத லாலே, யெந்தைதா னின்ன னென்று மின்னதா மின்ன தாகி, வந்திடா னென்றுஞ் சொல்ல வழக்கொடு மாற்ற மின்றே" என்றதனாற் காண்க. வீடு விடு என்னு முதனிலையிற் பிறந்ததொரு வினைப்பெயர்.

(315-317) ஆருயிர்க்கு உயிராய் அமைந்தன நடாவியும் ஆருயிர் காட்சிக்கு அணுகா அருந்திறல் தானாய் நின்று தன்காண் தனி முதல் - தாமே யுணர்தற்கரிய உயிர்க்குள் ளுயிராய் நின்று அவைக்கு ஆராய்ந்து காணுதற் கியலாத பண்டை நாளிலேயே தொடர்ந்துள்ள வினைப் பயன்களை நுகர்வித்து இயக்கியும் அவ்வரிய உயிர்களாற் காண்டற்குறாத அளவிடற்கரிய ஆற்றல்களுடைய தாமே யொரு தனியராய் நிலைபெற்றுத் தம்மை ஒருங்குணர்ந்துள்ள ஒப்பற்ற இறைவராய்,

(318)அளிகளின் அளியா அளிகளூஉங்கு அளியன் - அளிகளென்பவை யெல்லாவற்றுளும் தண்ணளியாகவும் அவற்றினும் மேம்பட்ட தலையளியினராய்,