பக்கம் எண் :

திருத்தணிகையாற்றுப்படை1575

செருந்தி என்பது முதல் மருங்கு கால் வளைஇ என்னு மளவும் ஒரு முடிபு.

(361-373) செருந்தி மந்தாரம் குருந்து வழை பாடலம் கோங்கு சண்பகம் வேங்கை மகிழ் சந்தனம் குங்குமம் மரவம் கோழகில் கப்புரம் இல்லம் ஆவிரை வில்லம் பாங்கர் பிடர் ஞெமை நமை ஆண்டு அடர்வரை எகின் சே அசோகம் தேக்கு ஆத்தி சூதம் மருது போதி வஞ்சி காஞ்சி ஞாழல் புன்னை நரந்தை மாதுளை பொகுட்டு அரை இருப்பை பூஞ்சினைச் சரளம் முன்னம் பலாசு முருக்கை வருக்கை சோதிமாமரம் தொத்தின நாகம் அன்றி அனைத்தும் துன்றிய கறிக்கொடி மல்லிகை முசுண்டை - செருந்தி முதல் நாக மீறாகக் கிடந்த மர வகைகளும் அவையன்றிக் கரணிகள் அனைத்தும் நெருங்கிப் படர்ந்த மிளகு மலைமல்லிகை முசுண்டை முதலிய கொடி வகைகளும்.

கப்புரம்-கப்புர மரம். இல்லம் - தேற்றா. அவற்றுள் பாங்கர் பிடர் ஞெமை நமை சரளம் இவை ஒரோவோர் மரச்சாதி. பொகுட்டரை யிருப்பை பொருக்காகிய அடியையுடைய இருப்பை. வரை மூங்கில் சே-செம்மரம். போதி-அரசு. பலாசு-வெண்முருக்கு. சோதி மாமரம்-பெருமையுள்ள சோதிவிருக்கம். கரணி-கொடிமருந்து. அவை சல்லியகரணி சந்தானகரணி சமநியகரணி சீவகரணி முதலியன. அனைத்துந் துன்றிய கறிக்கொடி என்பதற்கு இம் மரங்களெல்லாவற்றினும் சூழ்ந்து படர்ந்த கறிக்கொடி எனினுமாம்.

மற்றும் பரித்து - பிறவகை மரங்களையு மேற்கொண்டு,

அவை அத்தி ஆல் இலந்தை எலுமிச்சை ஏலம் ஏழிலைம் பாலை ஓமை கடு குரா கோட்டம் சிந்தூரம் சிவந்தி நறுவிலி நாவல் பச்சிலை மஞ்சாடி மரா வன்னி வெட்பாலை வேல் முதலியனவுங் கொள்க.

(374-375) மணம் கமழ் காமர் வல்லி ஒன்றே இணங்கு பூ தரும் தன் இகழ்ச்சியை நாடி-மணமிக்க காமவல்லி யென்னும் அஃதொன்றுதானே தனக்கு ஏற்ற பூத் தருகின்ற சிறுமையை நாடி,

காமவல்லி தேவருலகிற் கற்பகத்தின்மேற் படர்ந்துள்ள தொரு பூக்கொடி. ஆண்டு ஐந்தென்னுமெண்ணுள்ள தருக்களே யன்றி ஈண்டுள்ள பலவேறு கோட்டுப்பூக்கள் மலிந்த எண்ணில்லாத் தருக்களின்மை நோக்கி வல்லியொன்றே என்றும், அக்கொடியொன்றே யன்றிப் பலவின்மை பற்றி இகழ்ச்சியை நாடி என்றுங் கூறினர். ஏகாரம் பிரிநிலைக்கண் வந்தது. இகழ்ச்சி : ஆகுபெயர்.

(376-379) வசைபட தத்தம் இசை விளக்குவபோல் பொறிவரி சுரும்பும் வெறிநுகர் தேனும் தோகைமா மயிலும் தொடிகண் பூவையும் கிள்ளையும் குயிலும் தெள்ளுகுரல் காட்டி-பொன்னகர் அவ்வசை பட்டதால் தம் தம் இசையைப் புலப்படுத்துவன போல, பொறியுள்ள பண்வல்ல சுரும்பினமும் கள்ளுண்ணும் தேனினமும் பெரிய கலாபமயில்களும் தொடி போலும் கண்ணையுடைய பூவைகளும் கிள்ளைகளும் குயில்களுமாகிய இவை இனிய குரலோசையைக் காட்டி,