| சுரும்பு வண்டினாண், தேன் அதன் பெடை, தொடி வளை, இசை : புகழ் பண் என்னும் பலபொரு ளொருசொல். (380) வண்தளிர் பொதும்பர் மருங்குகால் வளைஇ - பச்சென்ற தளிர்களையுடைய சோலைகளின் பாங்கர்ப் பயில, வளைஇ : எச்சத்திரிபு. வண்மை - பசுமை. செருந்தி முதல் நாக மீறாகக் கிடந்த மரங்களும் அன்றி யனைத்தும் கறிக்கொடி முதலியவும் மற்றும் பரித்து வல்லியொன்றே பூத்தருந்தன் இகழ்ச்சியை நாடித் தத்தமிசை விளக்குவபோலச் சுரும்பு முதல் குயிலீறாகவுள்ளவை குரற்காட்டிப் பொதும்பர் மருங்குகால் வளைஇ என முடிக்க. நுண்டளி யென்பது முதல் தணிகைமலை கிழவோன் என்னு மளவும் ஒரு முடிபு. (381-383) நுண்தளி நறுந்தேன் நோலாது திவளும் ததை மலர் சினைய தரு ஐந்து உடுத்த பொன் நகர் வறுமையை முன்னிநக் காங்கு - நுண்ணிய திவலையான நறிய தேனை உடைத்தாயிராது துவளுகின்ற மலர் நிறைந்த கிளைகளையுடைய ஐந்தருக்கள் சூழ்ந்த பொன்னகரத்தினது வறுமையை நோக்கி நகைத்தாற்போல, திவளல் துவளலுமாம். பொன்னகர்க்கு வறுமை பொன் மலர்க்குத் தேனின்மையும் மணமின்மையுமாகிய இவற்றால் வறுமை புணர்த்தது. (384-390) வேரல் நரன்று உக்க வெள் மணிக்குப்பையும் பிறழ்பல் பேழ்வாய் பின்முன் பார்வை சிங்க வல்லேறு பொங்குசினம் திருகி எழுந்து தாய் துமிப்ப இரும் கடாயானை மத்தகம் பிளந்து மாயிரும் குன்றத்து வெண்புனல் அருவி வீழ்வனபோல சலசல வுக்க தரளக் குவாலும் - மூங்கில்கள் கணுக்கள் பீறி உதிர்ந்த முத்தின் திரளும் வரிசை பிறழ்ந்த பற்களையும் பெரிய வாயையும் பின்னு முன்னு நோக்கும் பார்வையையு முடைய வலிமையுடையதான சிங்கவேறு பொங்கிய சினமுதிர்ந்து மேலெழுந்து பாய்ந்து மோதலால் மிக்க மதம் பொழியும் யானைகளுடைய மத்தக மிருகூறாகி மிகவு முயர்ந்த மலையினின்றும் வெள்ளிய நீரருவிகள் விழுவன போலச் சலசலவென் றுதிர்ந்த முத்தின் திரளும் (சேர்ந்து), கடா என்பதில் அயனீட்சி சொற்சுவை நோக்கி வந்தது. சலசல என்பது அநுகரண வொலி. (391-392) நில உராய் தவழ நெமிர்ந்தன மிளிரும் கவான் மலைப்புனத்து - மதியொளியை விரித்து எங்கும் பொருந்துமாறு பரவி யொளிர்தற் கிடமாகிய மலைப்புறத்திற் புனங்களிடத்தே, |