பக்கம் எண் :

1578தணிகைப் புராணம்

அடுக்கு மிகுதி குறித்து நின்றது.

(411) மண்டலம் விண்டலம் மாற்றியது என்ன - மண்ணுலகினை விண்ணுலகாமெனவும் விண்ணுலகினை மண்ணுலகா மெனவும் மாற்றினதென் னும்படி,

(412) இறும்பூது பயவா ஏர்குலாய் கிடந்த - வியப்பினை யுண்டாக்கி அழகு அடைகிடக்கின்ற,

(413-415) திசைகாப்பாளர் இசைநிறை தேவர் அலரவன் நெடுமால் ஆதிய கடவுளர் முதுக்குறை அன்பின் முறை முறை பழிச்ச - திக்குகளைக் காவாநின்ற இமையவரும் புகழ்மிக்க தேவரும் நான்முகன் நெடுமால் முதலிய பெருந் தேவரும் பேரறிவொடு கூடின அன்பினராய் நிரை நிரையாய் நின்று துதிசெய்யா நிற்ப,

(416) சாறுநாள் அல்லது வேறுநாள் அறியாது - எந் நாளினும் திருவிழா வதுவை முதலியவை யியலும் நாளேயன்றி வேறு வெற்று நாள் காணுதலில்லாமை,

வேறு நாள் சிறப்புக்களியலாமே வாளா கழியுநாட்கள்.

(417) உலக முழுது ஓம்பு பல்சிறப்பின் - உலக மனைத்தையும் பேரருள் பூண்டு காவாநின்ற பலவகைச் சிறப்பின் மாண்பினதாய்,

பல்சிறப்பு மூர்த்தி தலம் தீர்த்த முதலியவை. முற்றும்மை தொக்கு
நின்றது.

(418) நிலைபெறு தணிகைமலை கிழவோனே - நிலைபெற்ற திருத்தணிகை மலைக்குரியவன் என்க.

ஏ : அசைநிலை. நுண்டளித்தே னோலாது திவளும் பொன்னகர் வறுமையை முன்னிச் சிரிப்பது போன்று மணிக்குப்பையும் தரளக் குவாலும் தவழமிளிரும் மலைப்புனத்துக் காக்கும் மதி முகத்தார் விடுக்கும் மணியோ கானவர் கணையோ அலைத்தர விசும்பிற் கலன்களும் மின்னுக் கொடிகளும் வீழ்ந்தென்ன வரையில் காழுந் தாமமுந் ததைஇய தணிகை யெனவும், மண்டப முதலியவை வேற்றுமை தோற்றாவாய் வளந் தழீஇ எம்மருங்கும் அகிற்றூமமும் பளிதக் குப்பை கான்ற தீம்புகையும் விண் கெழுமி யிமைப்பன செய்யவும், மறுகும் வீதியும் நவமாகி யிமையாமை செய்யவும், மண்டலம் விண்டலம் மாற்றிய தென்ன ஏர்குலாய்க் கிடந்த தணிகை யெனவும், திசைகாப்பாளரும் தேவரும் ஆகிய கடவுளரும் பழிச்ச சாறுநா ளல்ல தறியாது பல்சிறப்பினதாய் நிலைபெற்றுள்ள தணிகைமலைக் கிழவோன் எனவு முடிக்க.

தாயக்குரிசிலது (2) தேராகிய நிலனும் (4) வழங்குதற்கமையா வண்மையுடைமையால் (5) புலவர் உள்ளத்தினை