பக்கம் எண் :

160தணிகைப் புராணம்

(இ - ள்.) இளமை பொருந்திய திருத்துழாய்மாலையை யணிந்த விண்டுவும், மணம் வீசுகின்ற தாமரைமலரிலிருந்த பிரமனும், இந்திரன் முதலிய தேவர்களும் மகிழ்ச்சியுற்றுச் செறிந்த பெருமையினால் நன்மை பொருந்திய நைமிசவனமானது ஆகாயத்தின்கட் டங்குகின்ற உலகங்களெல்லாம் பெருமைபொருந்திய பூவுலகத்தின் கட்குழுமிக் கலந்திருந்த தன்மையை யொத்தது.

(வி - ம்.) மன்னன் - இந்திரன். கொன்னும் - பெருமைபொருந்திய. மண்வரைப்பிடை நாகம் வைகும் நாடெலாம் குழீஇக் கலந்ததை நைமிச மொத்தது என முடிவுசெய்க.

(3)

 நீறு துன்று மேனியார் நிகழ்த்து கின்ற வேள்வியை
 ஊறு ஞற்ற முன்னுவார் கட்கூறு ஞற்ற மர்ப்படை
 வேறு வைப்ப வேண்டிலார் விழைந்து ஞற்று செய்வினை
 வீறு கின்ற வாற்றலம்ம மிண்ட கந்த கர்க்குமே.

(இ - ள்.) திருநீற்றினைப் பொருந்திய திருமேனியையுடைய முனிவர்கள் (மந்திரவிதியின் மரபுழிவழாது) செய்கின்ற யாகத்தினுக்கு இடையூறு செய்கின்றவர்கட்குத் தாங்கள் இடையூற்றினைச் செய்யப் போர்க்குரிய படைக்கலங்கள் (தங்கள் தவவலியன்றி) வேறாகக்கொள்ள விரும்பாதாராகி விரும்பிச் செய்கின்ற செயல்களால் மிகுகின்ற வல்லமையே (பகைவர்மாட்டுச்) செறிந்த செருக்கைக் கெடுக்கும். இஃதோராச்சரிய மிருந்தவா றென்னோ ?

(வி - ம்.) இவர்கள், தம் தவவலிமையான் "ஒன்னார்த் தெறலு முவந்தாரை யாக்கலு" மாகிய செயலுடையவரென்பதை விளக்கிய "அமர்ப்படை, வேறுவைப்ப வேண்டிலார் விழைந்துஞற்று செய்வினை, வீறுகின்ற வாற்ற லம்ம மிண்டகம் தகர்க்குமே" என்றார். மீண்டகம் - மிண்டகமென விகாரமெய்தி நின்றது. மிண்டு - செறிந்த. அகம் - செருக்கு.

(4)

 புகைய வட்ப டுந்தொறும் புயல்வி சும்பெ ழுந்தழல்
 நகைப டுந்தொ றுந்தடித்து நாறு நெய்யு குந்தொறும்
 அகைபு னற்ற விக்குமும்ப ரார்நி ரப்ப றுந்தொறும்
 பகைநி ரப்பு வையகம் பறைக்கு நீர தென்பவே.

(இ - ள்.) (ஆகாயமாகிய) மேலிடத்தில் யாககுண்டத்தின் புகை படுகின்ற காலந்தோறும் ஆகாயத்தில் மேகமெழாநிற்கும். யாகாக்கினியின் ஒளிபடுகின்ற காலந்தோறும் இடிதோன்றாநிற்கும். யாககுண்டத்தின் (சுருக்குச் சுருவங்களால்) நெய்யைக் கொட்டுந்தொறும் மேலெழாநின்ற புனல் துளியாநிற்கும். (இச்செயல்களால்) தேவர்கள் பசியாகிய தரித்திரம் நீங்கும்பொழுது உலகத்திலுள்ள உயிர்கள் நிரப்பாகிய பகையைக் கெடுக்கும் தன்மையை யுடையது.

(வி - ம்.) அவண் - ஈண்டு மேலிடம். நகை - ஒளி. தடித்து - மின்னல். நாறும் - தோன்றும். அகை - உயர்ச்சி. "அகைத்தல் வேதனை யொடித்தல் அறுத்திட லுயர்த்த லாமே" என்னும் நிகண்டானறிக. நிரப்பு - தரித்திரம். வையகம் - ஆகுபெயர். பறைக்கும் -