பக்கம் எண் :

நைமிசப் படலம்161

கெடுக்கும். நீரது - தன்மையையுடையது. என்ப - அசை. என்ப என்ப தைப் பலவறி சொல்லாகக்கொண்டு என்று ஆன்றோர் கூறுவார்க ளெனினுமாம்.

(5)

 ஏட்டை முற்றும் வன்பிறப்பி ரிக்க வன்ன வாய்தநேர்
 நாட்ட முற்ற வள்ளலாரை நாட்ட முற்ற லால்வினை
 மீட்டு மீட்டு மீட்டியீட்டி வெஃகு மின்ப வாழ்க்கைவிண்
 மாட்டும் வைத்தி ழைத்திலார் மரீஇய மாத வத்தரே.

(இ - ள்.) நைமிசத்திற் பொருந்திய முனிவர்கள் ஆசை முதிர்ந்த வலிய பிறப்பினைக் கெடுக்க ஆய்த எழுத்தினையொத்த மூன்று கண்ணையுடைய (தமதடியார்க்கு வேண்டுவனவற்றை வரையாது கொடுக்கும்) வள்ளலாகிய சிவபெருமானை நாடுதல் வினைமுதிர்தலானே, நல்வினை தீவினைகளாகிய இருவினைகளையும் மேலும் மேலும் ஈட்டி ஈட்டி விரும்பும் இன்பவாழ்க்கையினை விண்ணுலகத்தினிடத்தும் வைத்து வினையைச் செய்யார்.

(வி - ம்.) ஏட்டை - ஆசை; இளைப்புமாம். வர்னம் - வன்னமென விகாரப்பட்டு நின்றது. வன்னம் - எழுத்து. வள்ளலார் - ஈண்டுச் சிவபெருமான், நாட்டம் முற்றலால் - நாடுதல் முதிர்தலான். இன்பவாழ்க்கையினை விண்மாட்டும் வைத்து வினையீட்டி யிழைத்திலா மாதவரென்க. எனவே இறைவன் திருவடிப்பே றொன்றே கருதித் தவஞ்செய்பவரென்பது தெற்றெனப் புலனாகின்றது.

(6)

 தோலு டுக்கை வற்கலை துலங்கு நீறு வார்சடை
 மூல மாதி யூணினன்றி முன்ன லாவு ளத்தினார்
 சாலு மைந்த ருக்களுந் தயங்கு மற்றை யாவும்வந்
 தேலு மாறு கொள்கவென் றிரக்க வல்ல நீர்மையார்.
யுடையவர்களாவார்கள்.